செய்திகள்

தனியார் நிறுவனங்களில் 12 மணி நேர வேலை மசோதா: அதிகாரப்பூர்வ வாபஸ்!

கல்கி டெஸ்க்

னியார் நிறுவனங்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்கும் சட்ட திருத்த மசோதா கடந்த மாதம் 21ம் தேதி தமிழக சட்டப் பேரவையில் கொண்டுவரப்பட்டு ஏகோபித்த உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. அதைக் கடுமையாக எதிர்த்து எதிர்க்கட்சி மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகள் சிலவும் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தன. அதையடுத்து, தனியார் தொழிற்சங்கங்களின் சார்பாக பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றன.

இது சம்பந்தமாக சென்ற மாதம் 24ம் தேதி அனைத்துத் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் தமிழக அமைச்சர்கள் சிலர் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, 12 மணி நேர வேலை சட்ட திருத்த மசோதா நிறுத்தி வைக்கப்படுவதாக அன்று மாலையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து, இம்மாதம் மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே தினப் பூங்காவில் மரியாதை செலுத்தச் சென்றிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு கூடியிருந்த தொழிலாளர்கள் மத்தியில் பேசும்போது, ‘பெரும்பாலானவர்களுக்கு விருப்பமில்லாத இந்த 12 மணி நேர வேலை சட்ட திருத்த மசோதா திரும்பப் பெறப்படுவதாகவும், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும்’ என்றும் அறிவித்திருந்தார். அதன்படி, இன்று அந்த சட்டத் திருத்த மசோதா திரும்பப் பெறப்பட்டுள்ளதாக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு சட்டப்பேரவை செயலகம் அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டு இருக்கிறது.

தேனுடன் லவங்கப்பட்டை சேர்ந்து வழங்கும் 11 அற்புதப் பலன்கள்!

சிவபெருமானை எந்த மலர் கொண்டு வழிபட என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?

கனமழையின் போது ஏசி பயன்படுத்தலாமா? நன்மைகளும், தீமைகளும்! 

நதியின் நடுவில் ஈரக் கருவறை உள்ள கோயில் எது தெரியுமா?

ஒருவர் ஏன் கட்டாயம் மருத்துவக் காப்பீடு எடுக்க வேண்டும்? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

SCROLL FOR NEXT