Afthap shradha 
செய்திகள்

மும்பை வாலிபரை ஏற்றி வந்த போலீஸ் வேன்!15 பேர் தாக்குதல்!

காதலியை 35 துண்டுகளாக வெட்டிய வாலிபர்!

கல்கி டெஸ்க்

தனது காதலியை 35 துண்டுகளாக வெட்டிய மும்பையைச் சேர்ந்த அஃப்தாப் என்ற வாலிபரை ஏற்றிவந்த போலீஸ் வேன்மீது 15 பேர் அடங்கிய கும்பல் வாளுடன் தாக்குதல் நடத்தியது.

மும்பையைச் சேர்ந்த அஃப்தாப் என்ற வாலிபர் கடந்த மே மாதம் தன்னுடைய காதலி ஷ்ரத்தா என்பவரை டெல்லிக்கு அழைத்துச் சென்று வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கொலை செய்தார். அதோடு காதலியின் உடலை 35 துண்டுகளாக வெட்டி ஃபிரிட்ஜில் வைத்து ஒவ்வொன்றாக எடுத்துச்சென்று காடுகளில் விசியெறிந்தார். இக் கொலை சம்பவங்கள் மே மாதம் நடந்திருந்தாலும், தற்போது தான் இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. ஷ்ரத்தாவின் உடல் பாகங்கள் இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை. நேற்று அஃப்தாப் உண்மை கண்டறியும் சோதனைக்காக திகார் சிறையிலிருந்து தடயவியல் ஆய்வு மையத்துக்கு அழைத்து வரப்பட்டார்.

shradha

மும்பையைச் சேர்ந்த அஃப்தாப் என்ற வாலிபர் தன்னுடைய காதலி ஷ்ரத்தா என்பவருடன் புது டெல்லியில் லிவிங் டு கெதர் முறையில் வசித்து வந்தனர் . ஷ்ரத்தா அஃப்தாப்பை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதை தொடர்ந்து காதலியின் உடலை 35 துண்டுகளாக வெட்டி ஃபிரிட்ஜில் வைத்து தினம் ஒவ்வொன்றாக எடுத்துச் சென்று அருகிலிருந்த காடுகளில் விசியெறிந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

நேற்று அஃப்தாப் உண்மை கண்டறியும் சோதனை முடிந்த பிறகு காரில் ஏற்றிய போது போலீஸ் வேனை மற்றொரு கார் மறித்தது. காரிலிருந்து இறங்கிய கும்பல் வாளுடன் போலீஸ் வேனை நோக்கி வந்தது. 15 பேர் கொண்ட கும்பல் அஃப்தாப் இருந்த போலீஸ் வாகனத்தை தாக்க முயன்றது. அவர்களில் இரண்டு பேர் போலீஸ் வாகனத்தை தாக்கினர். மற்றவர்களும் போலீஸ் வாகனத்தை விரட்டிச் சென்று தாக்க முயன்றனர். வன்முறையாளர்கள் போலீஸ் வாகனத்தை விரட்டிச் சென்று தாக்குவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவியிருக்கிறது.

அதோடு அஃப்தாபிடம் விசாரணை நடத்தி ஷ்ரத்தாவைக் கொலைசெய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இதுவரை 5 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. அதன் சோதனையில்தான் அவை ஷ்ரத்தாவைக் கொலைசெய்ய பயன்படுத்தப்பட்ட கத்திகளா என்று தெரியவரும்.

தவறுகளை ஒப்புக்கொள்வது உங்களை அடுத்த உயரத்துக்கு எடுத்துச்செல்லும்!

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை நிரூபித்த முதல் இந்திய விஞ்ஞானி!

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

SCROLL FOR NEXT