நாட்டிலேயே முதன்முறையாக 3-டி அச்சுமுறையில் இரண்டு மாடி குடியிருப்பு ஒன்றை ராணுவத்தினருக்காக குஜராத்திலுள்ள அகமதாபாத்தில் உருவாக்கியுள்ளனர்.
அகமதாபாத்திலுள்ள கண்ட் பகுதியில் ராணுவ வீரர்களுக்கான இந்த 2 அடுக்கு மாடி குடியிருப்பு 3D அச்சுமுறையில் ராணூவம் உருவாக்கியுள்ளது. இந்திய ராணுவப் பொறியியல் வல்லுனர்கள், மிக்காப் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து 3D தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தக் குடியிருப்பை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மேலும் இதுகுறித்து தெரிவித்ததாவது:
ராணுவத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நவீன வசதிகளுடன் இந்த கட்டடம் உருவாக்கப்பட்டுள்ளது. 3D தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மொத்தம் 71 சதுர மீட்டர் அளவிலான இந்த கட்டடம் மூன்றே மாதங்களில் கட்டி முடிக்கப் பட்டது. இதில் "பேரிடர் பாதுகாப்பு, நிலநடுக்கத்தை தாங்கும் அமைப்பு, பசுமைக் கட்டடம்" என அனைத்து அம்சங்களும் இடம்பெற்றுள்ளது.