செய்திகள்

அதிகாலையில் இந்தோனேஷியாவில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

கல்கி டெஸ்க்

இன்று அதிகாலை இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை.

துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் அடுத்தடுத்து ஏற்பட தொடங்கி உள்ளன. இந்தியாவில் வடஇந்திய பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நில அதிர்வு ஏற்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் நியூசிலாந்தில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. நியூசிலாந்து வெலிங்டன் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் 6.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால் பல்வேறு கட்டிடங்கள், வீடுகள் இடிந்தன. ஆனால் இதனால் பெரிய உயிரிழப்புகள் ஏற்படவில்லை.

இன்று அதிகாலை இந்தோனேசியாவில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று அதிகாலை இந்தோனேசியாவில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 97 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது. மேலும் இந்தோனேசியாவின் டோபெலோவிற்கு வடக்கு பகுதியில் 177 கிமீ தொலைவில் ஏற்பட்டு இருக்கிறது.

45000 பேரை பலி கொண்ட துருக்கி நிலநடுக்கம் இந்த வருடத்தில் நடைபெற்ற மிகப்பெரிய பேரழிவாக பார்க்கப்படுகிறது. துருக்கி அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதி ஆகும். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியில் இன்னும் மீட்பு பணிகள் முடியவில்லை.

இந்த நிலையில் அடுத்தடுத்து உலக அளவில் பல நாடுகளில் தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இப்போது சர்வதேச அளவில் அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கங்களுக்கு சர்வதேச வல்லுநர்கள் எந்த விதமான விளக்கமும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று அதிகாலை இந்தோனேசியாவில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேசியா நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள், பலிகள் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை. இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

தேனுடன் லவங்கப்பட்டை சேர்ந்து வழங்கும் 11 அற்புதப் பலன்கள்!

சிவபெருமானை எந்த மலர் கொண்டு வழிபட என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?

கனமழையின் போது ஏசி பயன்படுத்தலாமா? நன்மைகளும், தீமைகளும்! 

நதியின் நடுவில் ஈரக் கருவறை உள்ள கோயில் எது தெரியுமா?

ஒருவர் ஏன் கட்டாயம் மருத்துவக் காப்பீடு எடுக்க வேண்டும்? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

SCROLL FOR NEXT