செய்திகள்

ஆனி பௌர்ணமி - சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி!

கல்கி டெஸ்க்

ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல ஜூலை 1 முதல் 4-ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அமைந்துள்ளது சதுரகிரி மலை. இந்த மலைக்கு அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும். 

இந்த நாட்களில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக சென்று மலையேறி மகாலிங்கத்தை தரிசனம் செய்கின்றனர். 

அந்த வகையில், ஆனி மாத பவுர்ணமி, பிரதோஷத்தை முன்னிட்டு ஜூலை 1 முதல் 4-ம் தேதி வரை பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் தாணிப்பாறை அடிவாரத்தில் இருந்து காலை 7 முதல் பிற்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் என வனத் துறை அறிவித்துள்ளது.

துடுப்பற்ற படகு பயணம் போலாகும் இலக்கற்ற வாழ்க்கை!

எப்படி வாழ்ந்தோம் என்று இருக்க வேண்டும் வாழ்க்கை!

இந்திய மசாலா பொருட்களுக்கு நேபாளத்தில் தடை!

Kitchen Queen's tips: சமையலில் ராணியாக சில சமையல் குறிப்புகள்!

பசுவிற்கு ஏன் அகத்திக்கீரை கொடுக்கிறார்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT