செய்திகள்

விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் இரவு பாடசாலை!

க.இப்ராகிம்

நடிகர் விஜய் தமிழ்நாட்டில் பல கோடி சம்பளம் பெறும் முன்னாடி நடிகர்களாக உள்ளார். அதே நேரம் சமூக செயல்பாடுகளிலும் தற்போது தீவிரமாக ஈடுபட தொடங்கியுள்ளார்.

இதற்காக தனது விஜய் மக்கள் இயக்கத்தை பல்வேறு சமூக நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுத்தி வருகிறார். உலக பட்டினி தினத்தன்று இலவச உணவு வழங்கியது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கியது. மேலும் குருதி கொடை இயக்கம், விழியகம் என்ற பெயரில் கண் தான இயக்கம், குழந்தைகளுக்கு பால், ரொட்டி மற்றும் அனைவருக்கும் உணவு வழங்க விலையில்லா விருந்தகம் என்ற பல்வேறு திட்டங்களை செயற்படுத்தி வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக நேற்று ஜூலை 11அன்று தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட விஜய், அவர் அவர்களுடன் போட்டோ சூட்டும் நடத்தினார். இன்று ஜூலை 12 சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிடப்பட்டு 10 மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது விஜய் மக்கள் இயக்கம். அதில், காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை 15ம் தேதி முதல் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச இரவு பாட சாலை திட்டம் தொடங்க வேண்டும் என்றும் ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது 4 இடங்களுக்கு மேல் பாட சாலை அமைக்க வேண்டும். அதற்காக ஆசியரியர்களை தேர்வு செய்ய மாவட்ட தலைவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கிறது.

இரவில் அரிசி சாதத்தை தவிர்க்கச் சொல்வது ஏன் தெரியுமா?

ChatGPTயைத் தாண்டிய உலகம்: அடுத்த தலைமுறை AI கருவிகள்! அவசியம் தெரிஞ்சுக்கணும் மக்களே!

இதை தெரிஞ்சுக்கிட்டாலே போதும் முகத்தில் உள்ள கொழுப்பு காணாமல் போகும்! 

சுதந்திரப் போராட்ட வீராங்கனை உதாதேவியின் தைரியமும் தியாகமும் பற்றி தெரியுமா?

எங்கும் ஒலிக்கத் தொடங்கி விட்டது சுவாமி ஐயப்பனின் சரண கோஷம்!

SCROLL FOR NEXT