Putin 
செய்திகள்

வட கொரியாவை அடுத்து வியட்நாமிற்கு சென்ற ரஷ்ய அதிபர் புதின்… மாஸ் பிளான் போட்றாரு போல….!

பாரதி

இரண்டு நாட்கள் முன்னர்தான் ரஷ்ய அதிபர் புதின் வட கொரியா சென்றார். இதனைத்தொடர்ந்து தற்போது, அவர் வியட்நாம் சென்றுள்ளது உலக நாடுகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் பல வருடங்களாக போர் நடைபெற்று வருகிறது. ரஷ்யா மீது உக்ரைன் சமீபத்தில் தாக்குதல் நடத்தியது. அதில் உக்ரைன், ஜெர்மனி நாட்டின் ஆயுதங்களைப் பயன்படுத்தியது. அது ரஷ்யாவிற்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், ரஷ்யாவிடம் இருக்கும் சக்திவாய்ந்த ஆயுதங்கள் உக்ரைனிடம் அவ்வளவாக இல்லை என்பதே உண்மை.

ஆகையால்தான் ரஷ்யா தைரியத்துடன் இத்தனை வருடங்களாகப் போர் செய்து வருகிறது. தற்போது ஜெர்மனி உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கியது ரஷ்யாவை எதிர்ப்பதற்கு சமமாகக் கருதப்படுகிறது. ஆகையால், ரஷ்யாவின் கவனம் ஜெர்மனி பக்கம் திரும்பியுள்ளது. இதனால், ரஷ்யா அந்த நாட்டிற்கு எச்சரிக்கை விடுத்தது.

ரஷ்யாவின் சில பகுதிகள் மீது நீண்ட தொலைவு சென்று தாக்க கூடிய ஆயுதங்களை உக்ரைன் நாட்டுக்கு வழங்குவதற்கு அமெரிக்கா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் சமீபத்தில் ஒப்புக்கொண்டது. இதனால், முன்னெச்சரிக்கையாக இருக்கும் விதமாக ரஷ்ய அதிபர் உலக நாடுகளுக்கு பயணம் செய்து வருகிறார்.

அந்தவகையில் கடந்த 18ம் தேதி புதின் வடகொரியா சென்றார். அப்போது இரு நாடுகளுக்கும் இடைய பல ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஒட்டுமொத்தமாக, ரஷ்யாவிற்கு வடகொரியா போருக்குத் தேவைப்படும் அனைத்து விதமான உதவிகளையும் செய்யும் என்று வடகொரியா ஒப்புக்கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே இது உலக நாடுகளை அச்சத்தில் தள்ளிய நிலையில், ரஷ்ய அதிபர் புதின் தற்போது மற்றொரு நாட்டிற்கு சென்றுள்ளார்.

அதாவது புதின் தற்போது வியாட்நாமுக்கு சென்றிருக்கிறார். வியட்நாம் தலைநகர் ஹனோயில் அந்நாட்டின் முக்கிய தலைவர்களை அவர் இன்று சந்திக்கிறார். வியட்நாமுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த 1950லிருந்து நட்பு நீடித்து வருகிறது.

இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக வியட்நாம் 'மூங்கில் ராஜதந்திரத்தை' கடைபிடித்து வருகிறது. அதாவது, இது மற்ற நாடுகளுடன் கொள்ளும் உறவு வலுவாகவும், உறுதியாகவும் இருக்கும். அதேசமயம் நெகிழ்வுத் தன்மையுடனும் இருக்கும்.

இப்படியான உறவைதான் ரஷ்யா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளுடன் வியட்நாம் கடைபிடித்து வருகிறது. தொழில் நுட்பதுறையில் வியட்நாமின் வளர்ச்சி, தற்போது ரஷ்யாவை அந்நாட்டின் பக்கம் ஈர்த்திருக்கிறது. எனவே ரஷ்யா வியட்நாமுடன் நெருக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது. இதன் தொடர்ச்சியாகவே இந்த சந்திப்பு இன்று நடந்திருக்கிறது.

இது ஆயுத பரிமாற்றம் தொடர்பான சந்திப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா இதற்கு முன்னரே உக்ரைன் போரில் ஆயுதங்களை வாங்கவே புதின் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார் என்று எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் 8 மாலை நேரப் பழக்க வழக்கங்கள்!

மருத்துவத்துறையில் ஆக்டிவேட்டட் சார்க்கோலின் பயன்பாடுகள்!

இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய மோசடி… ஜாக்கிரதை மக்களே!

இது மட்டும் தெரிஞ்சா அதிக நேரம் கழிவறையில் இருக்க மாட்டீங்க! 

விளையாட்டு வீரரைப் போர் வீரராக மாற்றிய கம்பீர்… என்னாவா இருக்கும்???

SCROLL FOR NEXT