அமித் ஷா 
செய்திகள்

காஷ்மீர் குறித்து பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை கிடையாது: அமித் ஷா!

கல்கி டெஸ்க்

காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தானுடன் இந்தியா ஒருபோதும் பேச்சுவார்த்தை நடத்தாது என்று  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காஷ்மீரில் உரையாற்றினார்.

 மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 3 நாள் சுற்றுப்பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார். நேற்று ஸ்ரீநகரில் துணை நிலை ஆளுநர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதையடுத்து காஷ்மீரில் உள்ள பாரமுல்லாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு அமித்ஷா பேசியதாவது;

 ஜம்மு-காஷ்மீரில் தற்போது நிலவும் பயங்கரவாதத்தை ஒழித்து அமைதியான மாநிலமாக மாற்றுவோம். காஷ்மீரில் அனைத்து மாநிலங்களிலும் மின் இணைப்புகள் கடந்த மூன்று ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளோம்.

பாகிஸ்தானுடன் காஷ்மீர் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என சிலர் கூறுகிறார்கள். ஆனால், நாம் ஏன் பாகிஸ்தான் உடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.? பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை என்பது கிடையாது. ஜம்மு காஷ்மீரில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும்.

 -இவ்வாறு மத்திய அமைச்சர் அமித்ஷா பேசினார்.

கார்த்திகை மாதத்தில் வீட்டு வாசலில் இரண்டு விளக்கு ஏற்றுவது ஏன் தெரியுமா?

இளம் வயதினரைத் தாக்கும் புற்று நோய்கள் என்னென்ன தெரியுமா? 

கென்யாவில் 'தேனீ வேலி' - யானைகளையும் மனிதர்களையும் காக்கும் நல்முயற்சி!

விண்வெளியில் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக இருக்க முடியுமா?

தொற்று நோய்களைப் புரிந்துகொள்வது எப்படி?

SCROLL FOR NEXT