செய்திகள்

பவானிசாகர் அணையில் நீர்வரத்து : விவசாயிகள் மகிழ்ச்சி!

கல்கி டெஸ்க்

ஈரோடு மாவட்டத்தின் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது.. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. இந்த அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் வாய்க்கால்களில் திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இது தவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் பவானிசாகர் அணை விளங்குகிறது. 102 அடி பவானிசாகர் அணைக்கு நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாறும் நீர் வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது. மேலும் கோவை மாவட்டம் பில்லூர் அணையில் இருந்து நீர்மின் உற்பத்திக்காக திறக்கப்படும் தண்ணீரும், அணை நிரம்பிய பின் திறக்கப்படும் உபரி நீரும் மேட்டுப்பாளையம் வழியாக வரும் பவானி ஆற்றின் மூலம் பவானிசாகர் அணையில் கலக்கிறது.

பவானி சாகர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை, 105 அடி உயரம் கொண்டது. அணைக்கு நீர்வரத்து 6,149 கன அடியாக நேற்று காலை அதிகாரித்து. அணை நீர் மட்டம், 101 அடியாக உள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி மழை காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்த நிலையில், டெல்டா பாசனத்துக்கு, 20 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது.

நேற்று முன்தினம் பெய்த மழையால், 20 ஆயிரத்து, 626 கன அடியாக நேற்று காலை, 8:00 மணிக்கு நீர்வரத்து அதிகரித்தது. மாலை, 4:00 மணி நிலவரப்படி, அணை நீர்மட்டம், 119.74 அடியாக இருந்தது.

அக்னி நட்சத்திர காலத்தில் என்னென்ன செய்யக்கூடாது தெரியுமா?

முழங்கால் மூட்டு வலிக்கு காரணமும் உடனடி எளிய தீர்வும்!

ஆசியாவிலேயே உயரமான ஸ்தூபி, 130 அடி உயர புத்தரின் சிலை உள்ள மைண்ட்ரோலிங் மடாலயம்!

வீட்டில் 'உருளி' வைக்கும் முறையை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

இயற்கை எழில் கொஞ்சும் மாஞ்சோலை பற்றி உங்களுக்கு தெரியுமா?

SCROLL FOR NEXT