செய்திகள்

தமிழகத்தில் புலம்பெயர்ந்தோர் மரணம் குறித்து வதந்தி பரப்பிய பீகார் இளைஞர் கைது!

கார்த்திகா வாசுதேவன்

மிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளியின் மரணம் குறித்து வதந்தி பரப்பியதற்காக பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்து இளைஞர் ஒருவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

தென் மாநிலத்தில் தொழிலாளி ரவீந்திர மஹ்தோவின் மரணம் குறித்து சமூக ஊடகங்களில் போலி வீடியோவை பதிவேற்றிய பின்னர் குற்றம் சாட்டப்பட்ட உமேஷ் மஹ்தோ கைது செய்யப்பட்டார்.

கோபால்கஞ்ச் காவல் கண்காணிப்பாளர் (SP) ஸ்வர்ண பிரபாத், குற்றம் சாட்டப்பட்டவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதாகவும், ரவீந்திர மஹ்தோ கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒரு போலி வீடியோவை தமிழ்நாட்டில் பரப்பியதாகவும் கூறினார். கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள மதோபூர் கிராமத்தில் வசிப்பவர் ரவீந்திரா.

காவல்துறையின் கூற்றுப்படி, ரவீந்திர மஹ்தோ மார்ச் 7 அன்று கர்நாடகாவில் பெங்களூரு அருகே ரயிலில் அடிபட்டு இறந்தார். கர்நாடகாவின் சன்சந்த்ரா மற்றும் யல்ஹங்கா ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளத்தில் ரவீந்திர மஹ்தோவின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ரவீந்திர மஹ்தோ இந்த ஆண்டு தொடக்கத்தில் வேலை தேடி கர்நாடகாவுக்கு சென்றதாக இறந்தவரின் உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தங்கள் சக ஊழியர்களை தாக்கியதாகக் கூறப்படும் செய்திகளால் கிளர்ந்தெழுந்த நிலையில், இந்த சம்பவம் ஆபத்தான எதிர் விளைவுகளை ஏற்படுத்துவதாக அமைந்த்து. பீகாரின் கோபால்கஞ்ச் மற்றும் சிவான் மாவட்டங்களில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இந்த சம்பவத்தை எதிர்த்து போராட்டங்களை ஆரம்பித்தனர்.

ரவீந்திர மஹ்தோ கொலையால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் எஸ்பி பிரபாத் கூறினார். “கர்நாடகாவில் உள்ள எங்கள் சகாக்களை நாங்கள் தொடர்பு கொண்டோம், அவர்கள் ரவீந்திரா ரயிலில் அடிபட்டு இறந்ததை தெரியப்படுத்தினர். எனவே தமிழகத்தில் நடந்த சம்பவத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” எனத் தெரியவந்திருக்கிறது என்று அவர்  கூறினார்.

“அத்துடன் இத்தகைய குழப்பத்திற்கு காரணமான உமேஷ் மஹ்தோ மீது நாங்கள் ஐபிசி மற்றும் ஐடி சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளோம்" என்றும் எஸ்பி பிரபாத் கூறினார்.

முன்னதாக, தமிழ்நாட்டில் பீகாரில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வதந்திகளை பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் அமன் குமார் என்ற மற்றொரு இளைஞர் ஜமுய் எனும் இடத்தில் இருந்து கைது செய்யப்பட்டார். அவரை கடந்த மார்ச் 7ஆம் தேதி மாநில காவல்துறையின் தீவிரவாத தடுப்புப் பிரிவினர்ர் கைது செய்தனர்.

இதற்கிடையில், கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜெனரல் (ஏடிஜிபி) ஜே எஸ் கங்வார் கூறுகையில், தமிழக சம்பவம் தொடர்பான வதந்திகளை பரப்பியதற்காகவும், சமூக ஊடக தளங்களில் போலி வீடியோக்களை பதிவேற்றியதற்காகவும் இதுவரை நான்கு எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில், நிலைமையை மதிப்பிடுவதற்காக தமிழகம் சென்ற 4 பேர் கொண்ட அதிகாரிகள் குழு வெள்ளிக்கிழமை பாட்னாவுக்குத் திரும்பியது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அணியைச் சேர்ந்த ஒருவரான டி.பாலாஜி முருகன், தமிழகத்தில் இயல்பு நிலை உள்ளது. “சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட அனைத்து வீடியோக்களும் போலியானவை. தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் பீகாரில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்திய பிறகு உண்மை தெரிய வந்தது” என்று அவர் மேலும் கூறினார்.

தென் மாநிலத்தில் தங்கியுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பான தகவல்களை வழங்க அரசாங்கம் ஏற்கனவே ஒரு ஹெல்ப்லைனை அமைத்துள்ளது. மார்ச் 4 அன்று, அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட ஹெல்ப்லைன் எண்ணுக்கு மொத்தம் 740 அழைப்புகள் வந்தன.

பாஜக தலைவர்களின் தூதுக்குழுவின் கோரிக்கையின் பேரில் இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்ட பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரிடம் விஜயம் செய்த குழு உறுப்பினர்கள் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தனர். தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு ஏற்கனவே கூறியுள்ளது.

ஆண்டுவிழாவா! குடும்ப விழாவா! மகிழ்ச்சியில் மிதந்த மக்கள்!

ஸ்படிக மாலையால் கிடைத்த விஷ்ணு சஹஸ்ரநாமம்!

‘கத்புட்லி’ பொம்மலாட்டம் பற்றித் தெரிந்து கொள்ளுவோமா?

நல்ல சகுனம், கெட்ட சகுனம் எவை தெரியுமா?

உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உணவுகளை இப்படிச் சாப்பிட்டு பாருங்களேன்!

SCROLL FOR NEXT