பழனி தண்டாயுத பாணி
பழனி தண்டாயுத பாணி 
செய்திகள்

பழனி தண்டாயுத பாணி திருக்கோயிலின் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் காலைச் சிற்றுண்டி!

கல்கி டெஸ்க்

பழனியில் அறநிலையத்துறை சார்பில் மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். இன்று பழனி தண்டாயுத பாணி திருக்கோயிலின் கீழ் செயல்படும் இரண்டு பள்ளிகள் மற்றும் நான்கு கல்லூரிகளில் காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அருகில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தனர்.

பழனியில், ரூ. 3.7 கோடி மதிப்பில் 4,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை சிற்றுண்டி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த வகையில் இன்று மாணவர்களுக்கு வெண் பொங்கல் , ரவை பொங்கல், இட்லி போன்றவை காலை உணவாக பரிமாறப்பட்டது. இந்த குறித்து இந்து சமைய அறநிலையத்துறை, அரசின் அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளது. அந்த அரசு அறிக்கையில் பின்வருவனவற்றை தெரிவித்துள்ளனர்.

காலை சிற்றுண்டி திட்டம்

இந்து சமய அறநிலையத்துறை மூலம் திருக்கோயில்களின் மேம்பாட்டிற்காக 250 க்கும் மேற்பட்ட திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு, பல ஆண்டுகளாக ஓடாமல் இருந்த திருத்தேர்களை பழுதுபார்த்து வீதிஉலா, திருக்குளங்களை புனரமைத்தல், திருக்கோயில்களில் திருப்பணிகள், திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதுடன், சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்புகள் பக்தர்களின் பயன்பாட்டிற்காக ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.

அந்த வகையில், 2022-23 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில், "திண்டுக்கல் மாவட்டம், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பாக நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு கட்டணமில்லா காலைச் சிற்றுண்டி வழங்கப்படும்" என அறிவிக்கப்பட்டது.

காலைச் சிற்றுண்டி

அந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும்

அருள்மிகு பழனியாண்டவர். அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தொடக்கப்பள்ளி ஆகிய 2 பள்ளிகள் மற்றும் பழனி, அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி, அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி சின்னக்கலையம்புத்தூர், அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி, ஒட்டன்சத்திரம், அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய 4 கல்லூரிகளில் பயிலும் 4000 மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்.

இப்பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தொலைவில் இருந்து கல்வி பயில வருகை தருவதாலும், அவர்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டும் காலைச் சிற்றுண்டியாக ஒவ்வொரு நாளும் வெண்பொங்கல் மற்றும் இட்லி (அல்லது) ரவா உப்புமா மற்றும் இட்லி (அல்லது) கிச்சடி மற்றும் இட்லி ஆகியவற்றுடன் சட்னி, சாம்பார் சுழற்சி முறையில் வழங்கப்படும். இதற்கான செலவினம் திருக்கோயிலின் நிதியிலிந்து செலவிடப்படும்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர. சக்கரபாணி, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி.கே.சேகர்பாபு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் திரு. பி. சந்தரமோகன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு. ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர் திரு. இரா.கண்ணன், இ.ஆ.ப. மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து காணொலிக் காட்சி வாயிலாக கொண்டனர். திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ப.வேலுச்சாமி, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்.இ.ஆ.ப., மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பப்பாளி இலையில் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா?

மாமிச உண்ணிகளின் வயிற்றை விட, தாவர உண்ணிகளின் வயிறு பெரிதாக இருப்பது ஏன் தெரியுமா? 

முத்து முத்தாக வியர்வை துளிர்க்கும் சிக்கல் சிங்காரவேலர் கோயில் அதிசயம்!

தந்தத்துக்கு நிகரான கொம்புகளைக் கொண்ட காண்டாமிருகங்கள்!

ஒரு நபரை முதல்முறை சந்திக்கப் போகும்போது பின்பற்ற வேண்டிய விஷயங்கள்!

SCROLL FOR NEXT