நீர்த்துப் போன மாண்டஸ் புயலை பேரிடர் என 'பில்டப் செய்வத? என சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
திருப்பூரில் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. முன்னாள் முதலமைச்சர் தற்போதைய சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலு மணி, உடுமலை ராதா கிருஷ்ணன், எம்.எஸ்.எம். ஆனந்தன், பொள்ளாச்சி ஜெயராமன், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விழா நிகழ்ச்சியில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனி சாமி, திமுக பதவியேற்று 19 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில், மக்கள் என்ன பலனடைந்தார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும் என கேள்வி எழுப்பினார். திமுகவில் ஆட்களே இல்லை என்றும், அதிமுகவில் இருந்தவர்கள் தான் தற்போது அமைச்சர்களாக இருக்கிறார்கள் என்றும் ஈபிஎஸ் கூறினார்
மேலும் நீர்த்துப் போன மாண்டஸ் புயலை பேரிடர் என பில்டப் செய்வதா? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். அதனை தொடர்ந்து கஜா புயல், கொரோனா போன்ற பல்வேறு இயற்கை பேரிடர்களை கையாண்டு சாதனை படைத்தது அதிமுக அரசு என பெருமிதம் கொண்டார்.