பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளம் பாதிப்புகள் குறித்து நேரடியாக இணையதளத்தில் புகார் கொடுக்கலாம் என்று திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் நடைமுறைப் படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக, பொதுமக்கள், தங்கள் வசிப்பிடங்களில் மழைநீர் முறையாக வெளியேறாமல் தேங்கியிருந்தால், https://nellaineervalam.in/waterlogging/ என்ற இணையதளம் வழியாக நேரடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல்களை தெரிவிக்கலாம் என திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் இந்த புகார்கள் அனைத்தும் உடனடியாக கவனிக்கப்பட்டு அப்பகுதியிலுள்ள உள்ளாட்சி அமைப்புகள் மூலம் உடனடியாக தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இந்த இணையதளம் வாயிலாக பதிவு செய்யப்பட்ட சுமார் 1200 புகார்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டன என்றும் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.