கோரமண்டல் ரயில் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக அறிவித்துள்ளார்.படுகாயமடைந்த குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும் நிவாரணமாக அறிவித்துள்ளார். இதனை தவிர பிரதமர் நிவாரண நிதியிலிருந்து 2 இலட்சம் நிவாரண உதவி வழங்கப்படுகிது.
ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கோரமண்டல் ரயில் வண்டி எண் 12841 நேற்று மாலை 3:30 வழக்கம் போல மேற்கு வங்க மாநிலம் சாலிமரிலிருந்து புறப்பட்டது. இந்த ரயில்இன்று மாலை 4:50க்கு சென்னை வந்து சேரும்.
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளது.படுகாயமுற்ற 900-க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்த கோரமண்டல் ரயில், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரம் அருகே பஹனகா என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே சரக்கு ரயிலுடன் மோதிய விபத்தில் 12 பெட்டிகள் தடம்புரண்டது.
அதே நேரத்தில் மற்றோரு தடத்தில் வந்த யஷ்வந்தபூர் – ஹவுரா ரயில், தடம்புரண்டு விழுந்த பெட்டிகள் மீது மோதியது. இதில் ஹவுரா ரயிலின் 4 பெட்டிகள் தடம்புரண்டது. விபத்து குறித்து தகவலறிந்த ரயில்வே போலீசார் மற்றும் மீட்பு படையினர், தடம் புரண்ட பெட்டிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்து நேரிட்ட பகுதி, வனப்பகுதி என்பதாலும், இரவு நேரம் என்பதாலும், மீட்பு பணியில் சற்றுதொய்வு ஏற்பட்டது.
விபத்து குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணமாக தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும்” என அறிவித்தார்.