செய்திகள்

ரோஜ்கார் மேளா திட்டம்; இன்று 71 ஆயிரம் பேருக்கு மத்திய அரசுப் பணி ஆணை!

கல்கி டெஸ்க்

இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்கும் வகையில் பிரதமர் மோடி ரோஜ்கார் மேளா திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.இத்திட்டத்தின்படி அடுத்த ஒன்றரை வருடத்தில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என பிரதமர் அறிவித்தார். 

அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதத்தில் 75 ஆயிரம் பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. அந்த வகையில் மத்திய அரசின் ரோஜ்கார் மேளா இன்று நடைபெறுகிறது. இந்த மேளாவில் 71 ஆயிரம் பேருக்கு காணொலி மூலம் பிரதமர் மோடி பணி நியமன கடிதங்களை வழங்கி, அவர்களிடம் உரையாற்றுகிறார்.

இன்று காணொலி வாயிலாக பணி நியமனம் செய்யப்பட்ட அனைவருக்கும் காகித வடிவிலான பணி நியமன கடிதங்கள், நாடு முழுவதும் 45 இடங்களில் நேரடியாக வழங்கப்பட உள்ளன.

சட்டசபை தேர்தல் நடைபெறும் குஜராத், இமாசலபிரதேசம் மாநிலங்களில் மட்டும் இந்நிகழ்ச்சி நடத்தப்படவில்லை. வேலைவாய்ப்பு உருவாக்குவதற்கு உயர் முன்னுரிமை அளிக்கப்படும் என கூறிய பிரதமரின் உறுதிப்பாட்டை இது தெரிவிப்பதாக பிரதமர் அலுவலகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும் வேலைவாய்ப்புகளை உருவாக்க இது தூண்டுகோலாக அமையலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக பணி நியமனம் பெற்றவர்களுக்கு ஆன்லைன் புத்தாக்க பயிற்சி திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். 

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

12 ரோபோக்களைப் பேசி மயக்கி கடத்திய ரோபோ… திட்டம் போட்டு செய்த சம்பவம்… கிரிமினலாக மாறிய ஏஐ!

பெற்றோர்களை தெருவில் பிச்சையெடுக்க விடும் பிள்ளைகள்! கொடுமையின் உச்சம்!

SCROLL FOR NEXT