கனமழை
கனமழை 
செய்திகள்

தமிழகத்தில் மறுபடியும் கனமழைக்கு வாய்ப்பு! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

கல்கி டெஸ்க்

தென் தமிழ்நாட்டில் வரும் 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிப்பதாக தெரிவித்துள்ளது. இது, அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு வங்கக்கடலில் மேற்கு நோக்கி மெதுவாக நகரக் கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

கனமழை

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 20ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் மன்னார் வளைகுடாவில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அரசு வேலையில் சேர விருப்பமா? என்னென்ன துறைகள் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன?

ICC Champion Trophy: இந்தியாவின் அனைத்து போட்டிகளையும் ஒரே மைதானத்தில் நடத்தத் திட்டம்!

சர்க்கரை நோயாளிகள் சாக்கரின் பயன்படுத்தலாமா?

இஸ்ரேலுக்கு எதிரான முடிவை எடுத்த கொலம்பியா… என்ன காரணம்?

சச்சரவா? சண்டையா? எதுவானாலும் சமரசம் செய்ய இந்த 14 வழிமுறைகள் உண்டு!

SCROLL FOR NEXT