செய்திகள்

காவிரி டெல்டா பகுதியில் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

கல்கி டெஸ்க்

தஞ்சை ஆலக்குடி பகுதியில் வாய்க்கால் தூர் வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் , ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு மற்றும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் உடன் சென்றனர்.

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து வருகிற 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று தண்ணீர் திறக்க உள்ளார்.

.காவிரி டெல்டா மாவட்டங்களில் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை ஆய்வு மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு சென்னையிலிருந்து திருச்சிக்கு சென்றடைந்தார். இதன் பின்னர் தஞ்சையில் அரசு விருந்தினர் மாளிகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தஞ்சை அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் டெல்டா மாவட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். கல்லணையில் இருந்து திறக்கப்படும் நீர் கடைமடை வரை தங்குதடையின்றி செல்ல ரூ.90 கோடி செலவில் தூர்வாரப்படுகிறது.

தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் 5.30 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடியும், 8.90 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடியும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா பாசன பகுதி விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை மேற்கொள்ள ஆயத்தமாகி வருகின்றனர்.மேட்டூர் அணை தண்ணீரை எதிர்நோக்கி கல்லணை மட்டுமின்றி அது அந்த தண்ணீர் செல்லும் வழித்தடங்கள் அனைத்தையும் சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

நாகை,திருவாரூர் என ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வு செய்த பிறகு 11-ந்தேதி சேலம் மாவட்டத்திற்கு செல்கிறார். அங்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று 1 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். 12-ந் தேதி மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார்.

மணக்கும் சுக்குட்டிக் கீரை மசியலும் புடலங்காய் பொரியலும்!

உங்கள் வீட்டு நாய் ஆரோக்கியமாக இருக்க என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்? கால்நடை மருத்துவர் டாக்டர். பிரியா விளக்கம்!

சிறுநீரகக் கல் இவ்வளவு ஆபத்தானதா? அச்சச்சோ! 

குளிர் காலத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான மொறு மொறு பக்கோடா வகைகள்!

சின்ன விஷயங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தின் அவசியம் தெரியுமா?

SCROLL FOR NEXT