செய்திகள்

அரியலூர் ஹாக்கி வீரர் குடும்பத்துக்கு வீடு ஒதுக்கீடு; நேரில் சென்று அளித்த முதல்வர்!

கல்கி டெஸ்க்

இந்திய ஹாக்கி அணிக்கு தேர்வாகியுள்ள அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹாக்கி வீரர் கார்த்திக் குடும்பத்துக்கு வீடு ஒதுக்கீடு செய்து, அதற்கான ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அளித்தார்.

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் இந்திய ஹாக்கி அணிக்குக் கடந்த மே மாதம் தேர்வானார். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். அவரது தந்தை செல்வம் வங்கியில் இரவு நேரக் காவலாளியாக பணியாற்றியவர்.

இப்போது அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் காவலாளியாக பணியாற்றுகிறார்.அவரது தாய் வீட்டு வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கார்த்திக்கின் பயிற்சிக்கு உதவும் வகையில் ரூ.10 லட்சம் நிதியுதவி செய்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இந்நிலையில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின் நேற்று அரியலூரில் இந்திய ஹாக்கி அணி வீரர் கார்த்திக் வீட்டுக்கு நேரில்  சென்று சந்தித்த முதல்வர் ஸ்டாலின், அங்கு குரும்பஞ்சாவடி திட்டப்பகுதி அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணையை அவர்களுக்கு வழங்கினார்.

இன்று பெரம்பலூரில் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டவுள்ளது குறிப்பிடத் தக்கது.

தாயாருக்காக ஆதிசங்கரர் கட்டிய திருக்கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ஊருக்குப் போகப் போகிறீர்களா? இதைப் படிச்சிட்டு நிம்மதியாப் போங்க!

பாதாமி குகைகளின் ஆச்சரியத் தகவல்கள் தெரியுமா?

விருந்தோம்பலின் மறுபக்கம் மாறிவரும் கலாச்சாரம்!

ஒயிட் ஆனியனில் இருக்கும் ஒப்பற்ற நன்மைகள்!

SCROLL FOR NEXT