குட்டி காவலர் திட்டம் 
செய்திகள்

குட்டி காவலர் திட்டம்; கோவையில் முதல்வர் இன்று தொடக்கம்!

கல்கி டெஸ்க்

கோவையில் பள்ளி மாணவர்களைக் கொண்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 'குட்டி காவலர்' எனும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளி காட்சி வாயிலாக  தொடங்கி வைப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

-இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது;

கோவை கொடிசியா மைதானத்தில் இன்று காலை தொடங்கப்படும் ‘குட்டி காவலர்’ திட்டத்தில் சுமார் 5 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த நிகழ்வில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்க உள்ளார்.

இந்த திட்டத்தின்படி பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப் படும். அவர்கள் மூலமாக பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்லப்படும் மேலும் விபத்தால் ஏற்படும் பாதிப்புகள், சாலை விதிகள் போன்றவை குறித்து விரிவாக எடுத்துரைக்கப்படும்.

மேலும், 'தலைக்கவசம், சீட் பெல்ட் அணிவோம், அதிவேகமாக வாகனத்தை இயக்க மாட்டோம், வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசமாட்டோம்' என சாலை பாதுகாப்பு உறுதிமொழியை இந்த மாணவர்கள் எடுத்துக் கொள்வார்கள்.

-இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. 

தென்னிந்தியாவின் தாஜ்மகாலைப் பற்றித் தெரியுமா?

மூச்சிரைப்பு வந்தால் அதை சாதாரணமா நினைக்காதீங்க! 

காமதேனு சிலையை வீட்டில் எங்கு வைப்பது நல்லது தெரியுமா? 

யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனை… கைது செய்த வனத்துறையினர்!

சுவையான சேனைக்கிழங்கு மசாலா-உருளைக்கிழங்கு பொரியல் செய்யலாமா?

SCROLL FOR NEXT