கிம் ஜாங் உன் 
செய்திகள்

சினிமா பார்த்த 2 சிறுவர்களுக்கு மரண தண்டனை; வட கொரியாவில் அதிர்ச்சிகரம்!

கல்கி டெஸ்க்

தென் கொரியா மற்றும் அமெரிக்க திரைப்படங்களைப் பார்த்ததற்காக வட கொரியாவில் 2 சிறுவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றியதாக அதிர்ச்சிச் செய்தி வெளியாகியுள்ளது.

வட கொரியாவில், கே-நாடகங்கள் (K-Dramas) என்று பிரபலமாக அறியப்படும் தென் கொரிய நாடகங்களைப் பார்ப்பது சட்டப்படி குற்றம் என்றும் அதற்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படும் என்று சொல்லப் படுகிறது.

இந்நிலையில்  கடந்த அக்டோபர் மாதம் வட கொரியாவின் ரியாங்காங் மாகாணத்திலுள்ள ஒரு பள்ளியில் 16 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள், பல தென் கொரிய மற்றும் அமெரிக்க நாடக நிகழ்ச்சிகளைப் பார்த்ததாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக அச்சிறுவர்களுக்கு பொதுமக்கள் முன்னிலையில், வடகொரியாவில் ஹைசன் நகரிலுள்ள விமான நிலையத்தில் மரண தண்டனை நிறைவேற்றப் பட்டதாக இப்போது செய்தி வெளியாகி, உலக நாடுகளை அதிர்ச்சியுறச் செய்துள்ளன. 

என்னை துறந்து சென்றவனும் என்னால் துறக்கப்பட்டவனும்!

இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும் சமையல் எண்ணெய்கள்!

இந்த ரகசியம் மட்டும் தெரிஞ்சா இனி குளிர்ந்த நீரில்தான் குளிப்பீங்க! 

கார்த்திகை மாதத்தில் வீட்டு வாசலில் இரண்டு விளக்கு ஏற்றுவது ஏன் தெரியுமா?

இளம் வயதினரைத் தாக்கும் புற்று நோய்கள் என்னென்ன தெரியுமா? 

SCROLL FOR NEXT