சதுரகிரி
சதுரகிரி Intel
செய்திகள்

சதுரகிரி மலையில் தங்க அனுமதி இல்லை!

விஜி

வராத்திரி விழாவைமுன்னிட்டு சதுரகிரி வரும் பக்தர்கள் மலையில் தங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. மலை உச்சியில் உள்ள இந்த கோவிலுக்கு மாதத்தில் பவுர்ணமி, அமாவாசை ஆகிய நாட்களில் மட்டும் பக்தர்கள் தரிசனம் செய்ய தலா 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சதுரகிரி மலையில் நவராத்திரி விழா 10 நாட்களுக்கு கொண்டாடப்படும். இதனையொட்டி, பக்தர்கள் கடந்த 16ஆம் தேதி முதல் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் பக்தர்கள் 16ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை என 10 நாட்கள் சதுரகிரி மலையில் இரவில் தங்க அனுமதியளிக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள், பக்தர்கள் இரவில் தங்க அனுமதியில்லை என்றும், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தான் சதுரகிரி மகாலிங்கத்தை தரிசனம் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இதனை கேட்ட சதுரகிரி பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மாதம் 4 நாட்கள் மட்டுமே அனுமதியளிக்கப்படும் நிலையில், நவராத்திரியை முன்னிட்டு 10 நாட்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விமர்சனம்: இங்க நான் தான் கிங்கு - (நல்ல) சிரிப்புக்கு பஞ்சமில்ல!

அட்சதை அரிசியில் உறையும் இறைசக்தி!

வெந்நீர் Vs குளிர்ந்த நீர்: எதில் குளிப்பது உடலுக்கு நல்லது?

டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிக்க உதவும் எளிய வீட்டு வைத்தியங்கள்!

"தோனியும் நானும் கடைசி முறை ஒன்றாக விளையாடப் போகிறோம்..." – விராட் கோலி!

SCROLL FOR NEXT