செய்திகள்

தமிழ்நாடு காவல்துறையில் ‘டிரோன் போலீஸ்’ பிரிவை தொடங்கி வைத்தார் டிஜிபி சைலேந்திரபாபு!

கல்கி டெஸ்க்

குற்றங்களைக் குறைக்கவும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் தமிழ்நாடு காவல் துறையின் சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு காவல் துறை சார்பில், ‘சென்னை பெருநகர காவல் துறை டிரோன் போலீஸ் பிரிவு’ என்ற ஒரு புதிய பிரிவை ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த டிரோன் போலீஸ் பிரிவை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு இன்று சென்னையில் தொடங்கி வைத்தார்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் இந்த முன்னோடித் திட்டமான காவல் பிரிவில் டிரோன் போலீஸ் பிரிவு உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது சிறப்பான விஷயமாகும். இதன் மூலம் செயற்கை நுண்ணுணர்வு திறன் கொண்ட டிரோன்கள் காவல் காட்டுப்பாட்டு அறையின் தொலைத்தொடர்பு பிரிவுடன் இணைக்கப்பட்டுக் கண்காணிக்கப்படும். இந்த டிரோன்களை சுமார் 5 கி.மீ. தொலைவு வரையிலும் கட்டுப்பாட்டு அறையில் இருந்துகொண்டே இயக்கப்படும் வகையில் அவை வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன.

சுமார் 3.6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த டிரோன் போலீஸ் பிரிவின் மூலம் சென்னை நகரின் முக்கியமனான இடங்களின் போக்குவரத்து நெரிசலைக் கண்டறிவது மற்றும் ஆட்கள் நுழைய முடியாத இடங்கள், மக்கள் நெரிசலான பகுதிகள், பண்டிகை காலங்களில் நடைபெறும் குற்றங்களைத் தடுக்கவும் இந்த டிரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

"பயிற்சி செய் அல்லது செத்து மடி": ப்ரூஸ் லீயின் அறிவுரை!

Spider Man கதாபாத்திரத்தின் தலைசிறந்த 10 ஊக்கமூட்டும் பொன்மொழிகள்! 

Direct-to-Cell செயற்கைக்கோள் இணைப்பு: புதிய யுகத்தின் தொடக்கம்! 

உங்கள் வீட்டில் சிறிய குழந்தைகள் இருக்கிறதா? அப்படியென்றால் இதுபோன்ற செடிகளை வளர்க்காதீர்கள்!

திருக்கண்ணபுரம் முனையதரையன் பொங்கல் பிரசாதம் உருவான வரலாறு!

SCROLL FOR NEXT