Director Vethimaran held a condolence meeting for the death of Vetri Duraisamy. 
செய்திகள்

வெற்றி துரைசாமியின் மரணத்திற்கு இரங்கல் கூட்டம் நடத்திய இயக்குனர் வெற்றிமாறன்!

பாரதி

இயக்குனர் வெற்றிமாறன், சென்னை மாநகராட்சி அ.தி.மு.க முன்னாள் மேயரும் மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தின் நிறுவனருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் மரணத்திற்கு இரங்கல் கூட்டம் நடத்தியுள்ளார்.

தந்தையின் பயிற்சி மையத்தை மேலாண்மை செய்துக்கொண்டிருந்த வெற்றி துரைசாமி சினிமா துறையின் மீதுள்ள ஆர்வத்தால் ‘என்றாவது ஒரு நாள்’ என்ற படத்தை இயக்கினார். இந்நிலையில் இவரின் இரண்டாவது படத்தின் லொக்கேஷனைப் பார்ப்பதற்காக சிம்லா சென்றுவிட்டு திரும்பியபோது இவரின் கார் சட்லஜ் நதியில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இதையடுத்து 8 நாட்களுக்குப் பின் இவர் சடலமாக மீட்கப்பட்டார். இவரின் உடல் பிப்ரவரி 13ம் தேதி சென்னைக்கு கொண்டுவரப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இதனையடுத்து பலரும் அவரின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் வெற்றி துரைசாமியின் நெருங்கிய நண்பரான வெற்றிமாறன் தனது IIFC என்ற கல்வி நிறுவனத்தில் இரங்கல் கூட்டம் ஒன்றை நடத்தினார். அதில் வெற்றிதுரைசாமி பற்றி வெற்றி மாறன் பேசியதாவது, ”வெற்றி துரைசாமி என்கிட்டத்தான் சினிமா கத்துக்கிட்டேனு சொல்வார். ஆனால் உண்மையில் அவர்தான் எனக்கு அதிகம் கற்றுக்கொடுத்திருக்கிறார். எங்கள் இருவருக்குமே பறவைகள் விலங்குகள் என்றால் அதிக இஷ்டம். அவர் ஒரு நல்ல வைல்டு லைஃப் போட்டோகிராஃபர் ஆவார். அதில் நிறைய விருதுகளையும் வாங்கியிருக்கிறார்.

சென்ற வருடம் ஆப்பிரிக்கா சென்று கொரில்லா குடும்பத்தை போட்டோ எடுத்தார். அதேபோல் ஆர்டிக் சென்று பனிக்கரடிகளைப் போட்டோ எடுத்தார். இப்போது அதன் தொடர்ச்சியாகத்தான் பனிச்சிறுத்தையை போட்டோ எடுக்க சென்று உயிரழந்தார். பயணங்கள் மீது ஆர்வம் கொண்ட இவர் கடந்த 10 வருடங்களாக எனக்கு எதோ ஒரு விதத்தில் உதவிசெய்துக்கொண்டே இருந்தார்.

பறவைகள், மாடுகள், இசைக்கருவிகள் என நான் வாங்க விரும்பும் அனைத்தையும் அவரே எனக்குக் வாங்கித் தந்தார். அதேபோல்தான் நாங்கள் IIFC ஆரம்பிக்க திட்டம்போடும்போது அவர்தான் உதவிசெய்தார். எப்போதும் மற்றவர்களுக்கு உதவி செய்யும் பழக்கம் கொண்டவர்களுக்கு மட்டுமே இந்த மனம் இருக்கும்.

இன்னொருவர் கனவுக்காக வேலைப் பார்ப்பதற்கான மனம் யாருக்கும் அவ்வளவு எளிதாக வராது. அதேபோல் அவரின் அப்பாவுடைய மனிதநேயம் அறக்கட்டளைக்கும் நிறைய உழைத்திருக்கிறார். இவர் மனிதர்களிடம் மட்டுமல்லாமல் அனைவரிடமும் அன்பாக இருப்பவர். We lose a part of ourself in someone’s death" என்று தன் பேச்சை முடித்துள்ளார்.

உங்கள் வீட்டு நாய் ஆரோக்கியமாக இருக்க என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்? கால்நடை மருத்துவர் டாக்டர். பிரியா விளக்கம்!

சிறுநீரகக் கல் இவ்வளவு ஆபத்தானதா? அச்சச்சோ! 

குளிர் காலத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான மொறு மொறு பக்கோடா வகைகள்!

சின்ன விஷயங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தின் அவசியம் தெரியுமா?

ஸ்ரீ சத்யசாயி பாபாவின் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT