செய்திகள்

தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை எப்போது தெரியுமா? தேதி அறிவிப்பு!

கல்கி டெஸ்க்

தமிழ்நாட்டில் பக்ரீத் பண்டிகை வரும் 29-ஆம் தேதி கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக பக்ரீத் கொண்டாடப்படுகிறது. இறைதூதர் இப்ராகிமின் தியாகத்தை போற்றும் வகையில் கொண்டாடப்படும் இந்த விழா, ‘ஈத்உல்-அதா’ என்றும் தியாகத் திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் நேற்று பிறை தென்பட்டதை அடுத்து வரும் 29ஆம் தேதி வியாழக்கிழமை அன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.

அன்றைய தினத்தில் இஸ்லாமியர்கள் அனைவரும் குர்பானி கொடுத்தும், தொழுகையில் ஈடுபட்டும், ஒற்றுமையுடன் இணைந்து வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்வர்.

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

உங்கள் தன்னடக்கத்தை மேம்படுத்தும் 5 வழிகள்!

வேற்று கிரக வாசிகளால் செய்யப்பட்ட சிலையா? எந்தக் கோவிலில் உள்ளது தெரியுமா?

தொடர் ஏப்பத்துக்கான காரணமும் இயற்கை வழி தீர்வும்!

ஹீரோயினுக்காக கழிவறை கழுவிய இயக்குநர்… யாருப்பா அவர்?

SCROLL FOR NEXT