நிலநடுக்கம் 
செய்திகள்

காத்மாண்டுவில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம்!

கல்கி டெஸ்க்

நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் இன்று அதிகாலை 4.37 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 அளவில் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

இதுகுறித்து தேசிய நிலநடுக்க அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்ததாவது:

நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் இருந்து வடகிழக்கே 155 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை 4.37 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் 100 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தெரிவித்துள்ளது.

இதேபோல கடந்த அக்டோபர் மாதம் 19-ம் தேதி மற்றும் ஜூலை மாதம் 31-ம் தேதி காத்மண்டுவில் இருந்து தென்கிழக்கே 147 கி.மீ. தொலைவில் 6.0 அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் 25-ம் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் காத்மண்டு மற்றும் பொகாரா நகரங்களுக்கு இடையே கடுமையான தாக்கம் ஏற்பட்டது. அதில், அந்நாட்டு மக்களில் 8 ஆயிரத்து 964 பேர் உயிரிழந்தனர். 22 ஆயிரம் பேர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கென்யாவில் 'தேனீ வேலி' - யானைகளையும் மனிதர்களையும் காக்கும் நல்முயற்சி!

விண்வெளியில் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக இருக்க முடியுமா?

தொற்று நோய்களைப் புரிந்துகொள்வது எப்படி?

வரமிளகாய் வத்தக்குழம்பும், ஸ்பைசி தொண்டக்காய் வறுவலும்!

இது தெரிஞ்சா இனி நீங்க பிரட் சாப்பிடவே மாட்டீங்க! 

SCROLL FOR NEXT