சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் இன்று அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, எடப்பாடி பழனிசாமி வசம் அதிமுக வந்த பிறகு நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும்.
தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தோல்வி, பன்னீர்செல்வம் தொடர்ந்துள்ள புதிய வழக்கை எதிர்கொள்வது, பொதுச்செயலாளர் தேர்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட தென்னரசு தோல்வியை சந்தித்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தோல்விக்கான காரணம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
மேலும், அதிமுக பொதுச் செயலாளருக்கான தேர்தல் தொடர்பாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கு பிறகு அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகவுள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, நாளை அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பொதுச்செயலாளர் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டவுடன் மாவட்ட வாரியாக சுற்றுபயணம் செய்ய எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.