செய்திகள்

தேர்தல் மை தரமில்லை அதிமுக புகாருக்கு பதிலளித்த தேர்தல் அலுவலர் சிவக்குமார்!

கல்கி டெஸ்க்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களின் விரல்களில் வைக்கப்படும் மை அழிவதாக அதிமுக புகார் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவுக்கு அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை வாட்ஸ்ஆப் மூலமாக புகார் தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தலில் வாக்காளர்களின் விரல்களில் வைக்கப்படும் மை தொடர்பாக அதிமுக அளித்த புகாருக்கு தேர்தல் அலுவலர் சிவக்குமார் உடனடியாக பதில் அளித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று ஜனநாயக கடைமை ஆற்றி வருகின்றனர்.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் உள்ள 238 வாக்குச்சாவடிகளிலும் இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களின் விரல்களில் வைக்கப்படும் மை அழிவதாக அதிமுக புகார் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவுக்கு அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.இன்பதுரை வாட்ஸ்ஆப் மூலமாக புகார் தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்குத் தொகுதியில் உள்ள 238 வாக்குச்சாவடிகளிலும் இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களின் விரல்களில் வைக்கப்படும் மை அழிவதாக அதிமுக புகார் தெரிவித்துள்ளது.

அதில், வாக்களித்ததன் அடையாளமாக விரல்களில் வைக்கப்படும் மையின் தரம் மோசமாக உள்ளது என்றும், இதனை உடனடியாக சரி செய்யாவிட்டால், அது கள்ளஓட்டு போடுவதற்கு வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

, தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு, மையின் தரம் குறித்த பிரச்னையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக மை விவகாரத்தில் எந்த பிரச்னையும் இல்லை என தேர்தல் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரோடு கிழக்கு தொகுதியில் 9 மணி நிலவரப்படி 10.01% வாக்குகள் பதிவாகியுள்ளன வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெற்று வருகிறது. மை தொடர்பான புகார் வந்ததுள்ளது. அதில் எந்த பிரச்னையுமில்லை என தெரிவித்துள்ளார்.

"பயிற்சி செய் அல்லது செத்து மடி": ப்ரூஸ் லீயின் அறிவுரை!

Spider Man கதாபாத்திரத்தின் தலைசிறந்த 10 ஊக்கமூட்டும் பொன்மொழிகள்! 

Direct-to-Cell செயற்கைக்கோள் இணைப்பு: புதிய யுகத்தின் தொடக்கம்! 

உங்கள் வீட்டில் சிறிய குழந்தைகள் இருக்கிறதா? அப்படியென்றால் இதுபோன்ற செடிகளை வளர்க்காதீர்கள்!

திருக்கண்ணபுரம் முனையதரையன் பொங்கல் பிரசாதம் உருவான வரலாறு!

SCROLL FOR NEXT