எலான் மஸ்க் 
செய்திகள்

டிவிட்டரை வாங்கினார் எலான் மஸ்க்!

கல்கி டெஸ்க்

எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகின் பெரும் பணக்காரரும் அமெரிக்க டெஸ்லா நிறுவனத் தலைவருமான எலான் மஸ்க், கடந்த ஏப்ரல் மாதம் டிவிட்டர் நிறுவனத்தை சுமார்  மூன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்குவதாக தெரிவிக்கப் பட்டன.  இந்நிலையில் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதாகவும் டிவிட்டரை வாங்கப் போவதில்லை என  எலான் மஸ்க் கடந்த ஜூலை 10-ம் தேதி அறிவித்தார்.

டிவிட்டர் நிறுவனம் தனது கணக்கு வழக்குகள் குறித்த முழு விவரங்களை தர மறுப்பதால், அந்நிறுவனத்தை  வாங்கவில்லை என்று எலான் மஸ்க் கூறினார்.

இதனை எதிர்த்து டிவிட்டர் நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது.. இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம், இன்று மாலைக்குள் (அக்டோபர் 28) ஒப்பந்தத்தை இறுதி செய்ய கெடு விதித்தது.

இந்நிலையில், இன்று அமெரிக்க நியூயார்க் டைம்ஸ் ‘டிவிட்டர் நிறுவனத்துடனான ஒப்பந்தம் முடிந்து எலான் மஸ்க் டிவிட்டரின் உரிமையாளரானார்’ என்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் டிவிட்டரில் பதவி வகிக்கும் தற்போதைய உயர் அதிகாரிகளை எலான் மஸ்க் பணிநீக்கம் செய்ததாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கென்யாவில் 'தேனீ வேலி' - யானைகளையும் மனிதர்களையும் காக்கும் நல்முயற்சி!

விண்வெளியில் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக இருக்க முடியுமா?

தொற்று நோய்களைப் புரிந்துகொள்வது எப்படி?

வரமிளகாய் வத்தக்குழம்பும், ஸ்பைசி தொண்டக்காய் வறுவலும்!

இது தெரிஞ்சா இனி நீங்க பிரட் சாப்பிடவே மாட்டீங்க! 

SCROLL FOR NEXT