குடியரசுத் தலைவர் மாளிகை
குடியரசுத் தலைவர் மாளிகை 
செய்திகள்

குடியரசுத் தலைவர் மாளிகையை சுற்றி பார்க்கலாமா?

கல்கி டெஸ்க்

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையை பொதுமக்கள் பார்வையிடுவதற்காக டிசம்பர் 1-ம் தேதி முதல் திறந்து விடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து குடியரசு மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது;

குடியரசுத் தலைவர் மாளிகையை பொதுமக்கள் பார்வையிடுவதற்காக டிசம்பர் 1-ம் தேதி முதல் திறந்து விடப்படுகிறது.

பொதுமக்கள் முன்பதிவு செய்துவிட்டு வர அனுமதிக்கப் படுவர். அப்படி முன்பதிவு செய்தவர்கள் காலை 10 முதல் 1 மணி வரையிலும், பிற்பகல் 2 முதல் 4 மணி வரையிலும் அனுமதிக்கப்படுவார்கள்.

அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து வாரத்தில் ஐந்து நாட்கள் பொதுமக்களுக்கு அனுமதி உண்டு. குடியரசுத் தலைவர் மாளிகையை சுற்றிப் பார்க்க விரும்புபவர்கள், இணையதளத்தில் முன்பதிவு செய்து நேரம் ஒதுக்கீடு பெற வேண்டும். அதேபோல குடியரசுத் தலைவர் மாளிகையின் அருங்காட்சியக வளாகத்தையும் வாரம் ஆறு நாட்கள் பார்வையிடலாம்.

-இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனதுக்கு குற்ற உணர்வை தரும் பிழைகள்!

Sea Moss: தைராய்டை குணப்படுத்தும் கடல் பாசி! 

தியாகராய நகரில் சாலையோர கடைகளை அகற்றிய மாநகராட்சி ஊழியர்கள்!

உண்மையான சந்தோஷம் என்பது எது தெரியுமா?

பரவசமூட்டும் சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி!

SCROLL FOR NEXT