செய்திகள்

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு வருட சிறை தண்டனைக்கு தடை விதிக்க குஜராத் உயர் நீதிமன்றம் மறுப்பு!

கல்கி டெஸ்க்

டந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘அனைத்துத் திருடர்களின் பெயர்களும் மோடி என்றே முடிவது ஏன்?’ என்று மோடி சமூகம் குறித்து அவதூறாகப் பேசியதாக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இதையடுத்து ராகுல் காந்தி, மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் ஆனார்.

இந்த தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை செஷன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதையடுத்து ராகுல் காந்தி, குஜராத் நீதிமன்றத்தில் தனக்கு வழங்கப்பட்ட இரண்டு வருட சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி ஒரு மனுவையும், மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வரும் வரை குற்றவாளி என்று நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி மற்றொரு மனுவையும் தாக்கல் செய்திருந்தார். அந்த இரண்டு மனுக்களையும் ஏற்றுக்கொண்ட குஜராத் நீதிமன்றம், ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இந்த நிலையில், ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட இரண்டு வருட சிறைத் தண்டனையை ரத்து செய்யக் கோரிய மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது அதில், அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனைக்கு தடை விதிக்க குஜராத் உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு இருக்கிறது. மேலும், இரண்டு வருட சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்க உரிய காரணங்கள் இல்லாததால் இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தெரிவித்து இருக்கின்றனர்.

6 ரூபாயில் குழந்தைகளுக்கான ஆயுள் காப்பீட்டுத் திட்டம்: முழு விவரம் உள்ளே!

சரும நோய்களைப் போக்கும் சிறந்த நிவாரணி புங்கம்!

பாவங்களைப் போக்கும் பர்வதமலை மல்லிகார்ஜுனேஸ்வரர்!

மாம்பழ சுவையில் மதி மயங்கி உடல் ஆரோக்கியத்தை மறவாதீர்!

தென்கொரியாவில் உண்ணப்படும் மிகவும் பிரபலமான ஸ்நாக்ஸ் வகைகள்!

SCROLL FOR NEXT