சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம் 
செய்திகள்

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை எச்சரிக்கை!

கல்கி டெஸ்க்

தமிழகத்தில் இன்று 21 மற்றும் நாளை 22 ஆம் தேதிகளில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கனமழை எச்சரிக்கை காரணமாக மாவட்ட நிர்வாகங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்திற்கு அடுத்த 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளதோடு தொடர்ந்து 5 நாட்கள் கனமழை பெய்யு வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதன் அருகில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடலின் மத்தியபகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகக்கூடும். பின்னர் இது மேற்குவடமேற்கு திசையில் வட தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

இதன் காரணமாக இன்றுமற்றும் நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால்பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

21 ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிருஇடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ராணிப்பேட், திருவள்ளூர் மாவட்டம் மற்றும்புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

22 ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிருஇடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ராணிப்பேட், திருவள்ளூர் மாவட்டம் மற்றும்புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

20 மற்றும் 21-ம் தேதிகளில் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், தமிழக - புதுவைகடலோரப்பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல்மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்றுமணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

22-ம் தேதிகளில் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர்வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பேரிடர்மேலாண்மைத்துறை, சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் அனைத்து மாவட்டஆட்சியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கனமழையை எதிர்கொள்ளதேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒன்பது வாசல் கடந்து மூலவரை தரிசிக்கும் கோயில் எங்குள்ளது தெரியுமா?

சூரியகாந்தி விதையின் வியக்க வைக்கும் மருத்துவப் பலன்கள்!

Type 1 Diabetes: இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை! 

பலாக் கொட்டையின் வியக்க வைக்கும் அற்புதப் பலன்கள்!

ஸ்மார்ட்போனை ரீஸ்டார்ட் செய்வதால் இவ்வளவு நன்மைகளா? 

SCROLL FOR NEXT