இந்திய நாட்டில் பிறந்தவர்களின் சாதனைகளைப் போற்றும் விதமாக வழங்கப்படும் விருதுகள்தான் சிவிலியன் விருதுகள். ஆண்டுதோறும் ஏராளமான விருதுகளை இந்திய அரசு வழங்கி வருகிறது. சிவிலியன் விருதுகளை ஒவ்வொரு துறைகளில் சாதிக்கும் நபருக்கும் தனித்தனியாக வழங்கப்படுகின்றன. இந்த விருதுகள் ஆண்டுதோறும் நடைப்பெறும் குடியரசு தின விழாவில் குடியரசு தலைவரால் வழங்கப்படுகிறது. அந்தவகையில் முக்கியமான சிவிலியன் விருதுகளைப் பற்றி பார்ப்போம்.
1. பாரத ரத்னா: இந்த விருது 2013ம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. இது விளையாட்டு, அறிவியல், இலக்கியம், கலை மற்றும் பொது சேவைகள் ஆகியவற்றில் சாதனைகள் படைக்கும் நபர்களுக்கு வழங்கப்படும் விருது.
2. பத்ம விபூஷன்: இந்த விருதும் கலை, இலக்கியம், அறிவியல், பொது சேவைகளில் சாதனைப் படைப்பவர்களுக்கு வழங்கப்படும் இரண்டாவது உயரிய விருது.
3. பத்ம பூஷன்: இது பொதுத்துறை நிறுவனங்களைத் தவிர்த்து மற்ற அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குபவர்களுக்குக் கொடுக்கும் மூன்றாவது உயரிய விருது.
4. பத்ம ஸ்ரீ: அரசு ஊழியர்கள் உட்பட பல துறைகளில் சாதனைப் படைப்பவர்களுக்கு வழங்கப்படும் நான்காவது உயரிய விருது.
இவையில்லாமல் ஒவ்வொரு துறைகளிலும் சாதிப்பவர்களுக்கென தனித்தனி விருதுகளும் உள்ளன:
1. அர்ஜுனா விருது: இது விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு கடந்த 1961ம் ஆண்டிலிருந்து வழங்கப்படும் விருது.
2. துரோணாச்சார்யா விருது: இது 1985ம் ஆண்டிலிருந்து விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் பயிற்சியாளர்களுக்கென வழங்கப்படும் விருது.
3. ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது: இந்த விருதை 2021ம் ஆண்டு 'சந்த் கேல் ரத்னா விருது' எனப் பெயர் மாற்றம் செய்துள்ளனர். விளையாட்டுத் துறையில் ரத்தினம் என்று கருதப்படும் ஒருவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும்.
4. ஞானபீட விருது: இந்த விருது இலக்கியத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் விருது.
5. சாகித்யா அகடாமி விருது: இது இலக்கியத்தில் சிறந்த படைப்பாளியாக இருப்பவர்களுக்கு ஆண்டுதோறும் மாநில அளவிலும் மத்திய அளவிலும் வழங்கப்படும் விருது. இந்த விருது வென்றவர்களுக்கு 1 லட்ச ரூபாயும் பட்டயமும் வழங்கப்படும்.
6. தாதாசாகிப் பால்கே விருது: சினிமா துறையில் வாழ்நாள் சாதனைப் படைப்பவர்களுக்கு வழங்கப்படும் விருது. சினிமா துறையின் தந்தையான தாதாசாகிப்பின் நூறாவது பிறந்தநாளான 1969ம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது.
7. தேசிய திரைப்பட விருதுகள்: இது சிறந்த திரைப்படத்திற்கும் திரைப்பட சாதனைகளின் அடிப்படையிலும் வழங்கப்படும் விருது. அரசு 1954ம் ஆண்டு இந்த விருதை வழங்க வேண்டும் என்ற முடிவெடுத்து 1973ம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது.
8. காந்தி அமைதி பரிசு: சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் ஆகியவற்றில் நல்ல மாற்றங்களுக்காக அகிம்சை வழியில் போராடுபவர்களுக்கான விருது இது.
9. சாந்தி ஸ்வரூப பட்நாகர் பரிசு: இந்த விருது அறிவியம் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்த ஆராய்ச்சிகளை அங்கீகரிக்கும் விருது.
10. பரம் வீர் சக்ரா: இது எதிரிகளை துணிச்சலாக எதிர்த்து சண்டையிட்ட சிறந்த ராணுவ வீரர்களுக்கான விருது.
11. அசோக சக்கரம்: இது போர்க்காலங்கள் இல்லாத சமயங்களில் தனது துணிச்சலை வெளிப்படுத்தும் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் விருது.
12. வீரத்திற்கான பத்ம விருதுகள்: இது அனைத்து சமயங்களிலும் வீரத்தை வெளிப்படுத்தும் ராணுவ வீரர்களுக்கான விருது.
இவைத்தான் இந்தியாவில் முக்கியமாக ஆண்டுதோறும் வழங்கப்படும் குடிமை விருதுகள் ( Civilian awards).