குறுஞ்செய்தி அல்லது மெயில் மூலம் கடவுச்சொற்களைத் திருடும் சைபர் குற்றவாளிகளின் சிண்டிகேட் சம்பந்தப்பட்ட உலகளாவிய சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட 111 நாடுகளின் பட்டியலில் இந்தியா உலகளவில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. அதில் ஆசியாவில் முதல் இடத்தையும் பிடித்துள்ளது.
சிங்கப்பூரில் உள்ள இணைய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான குரூப் ஐபி இந்த ஆய்வை நடத்தியது. குரூப் IB இன் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், 34 ரஷ்ய மொழி பேசும் சைபர் குற்றவாளிகள் டெலிகிராம் வழியாக தகவல் திருடும் மால்வேர்களை விநியோகித்து வருகின்றனர் என்று சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
இன்போ ஸ்டீலர் எனப்படும் யுக்தி கொண்டு கடவுச்சொற்கள், கேமிங் கணக்குகள், மின்னஞ்சல் சேவைகள் மற்றும் சமூக ஊடகங்கள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்கள், கிரிப்டோ வாலட் தரவு மற்றும் குக்கீ கோப்புகளை இந்த மால்வேர் மூலம் சேகரித்து அதை ஆப்ரேட்டர்களுக்கு அனுப்பும்.
மோசடி செய்பவர்கள் திருடப்பட்ட தரவை டார்க் வெப் சந்தைகளில் தகவலை விற்று பணம் பெறுவார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில், சிண்டிகேட் உலாவிகளில் இருந்து 11 கோடி குக்கீ கோப்புகளை இந்த முறையில் திருடியுள்ளனர்.
மோசடி செய்பவர்கள் திருடப்பட்ட தரவை டார்க் வெப் சந்தைகளில் தகவலை விற்று பணம் பெறுவார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில், சிண்டிகேட் உலாவிகளில் இருந்து 11 கோடி குக்கீ கோப்புகளை இந்த முறையில் திருடியுள்ளனர்.
இந்த சாதனங்கள் மூலம் ஹேக்கர்கள் 117,645,504,550 குக்கீ கோப்புகள்,கடவுச் சொற்கள், 4,657 பேங்க் கார்டுகளின் விவரங்கள் மற்றும் 4,428 கிரிப்டோ வாலட் தகவல்களை திருடியுள்ளதாக தெரிகிறது.
இந்தியாவில், சைபர் குற்றவாளிகள் அடிக்கடி சேகரிக்கும் கடவுச்சொற்களில், திருடப்பட்ட கடவுச்சொற்களில் 32% அமேசான் கடவுச்சொற்களும் அடங்கும். PayPal 17% ஆக இருந்ததுள்ளது. எனவே உங்கள் தரவுகளை முழுமையாக இணைய முகவரிகளில் சேகரிக்காமல் கொஞ்சம் நினைவில் சேகரித்துகொண்டால் திருட்டில் இருந்து கொஞ்சம் தப்பித்துக் கொள்ளலாம்.