maamanithan  
செய்திகள்

சர்வதேச திரைப்பட விழா 2022 !

கல்கி டெஸ்க்

சென்னையில் சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 15 முதல் 22 வரை நடைபெறயிருக்கிறது . சென்னை சர்வதேச திரைப்பட விழா 2022 வில் 12 தமிழ் படங்கள் கலந்து கொள்ளவிருக்கிறது. பா.ரஞ்சித்தின் ரொமான்ஸ் படமான நட்சத்திரம் நகர்கிறது, ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் சிங்கிள் ஷாட் படம் இரவின் நிழல், விஜய் சேதுபதி , சீனு ராமசாமியின் மாமனிதன் உள்ளிட்ட படங்கள் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

20-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா (CIFF), சென்னையில் டிசம்பர் 15 முதல் 22 வரை நடைபெற உள்ளது. விழாவில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்கள் உட்பட 48 நாடுகளில் இருந்து 107 படங்கள் திரையிடப்படுகிறது.

இரவின் நிழல்

தகுதியான தமிழ் படங்களுக்கு CIFF-ல் போட்டி பிரிவு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், 12 தமிழ் படங்கள் இந்த பிரிவில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அதில் மூன்று படங்கள் சிறந்த படங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்படுகின்றன. CIFF-ன் இந்த ஆண்டு விழாவைப் பற்றிய விவரங்களை அறிவிக்கவும், போட்டிப் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 படங்களின் பட்டியலை வெளியிடவும் விழா ஏற்பாட்டாளர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டுள்ள 12 தமிழ் படங்களில் கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில், சாய் பல்லவி நடிப்பில் வெளியான கார்கி, பா.ரஞ்சித்தின் ரொமான்ஸ் படமான நட்சத்திரம் நகர்கிறது. ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் சிங்கிள் ஷாட் படம் இரவின் நிழல், விஜய் சேதுபதி-சீனு ராமசாமியின் மாமனிதன், ராம்நாத் பழனிகுமாரின் ஆதார், சிம்புதேவனின் ஆந்தாலஜி படமான கசடதபற, வைபவ் நடிப்பில், அசோக் வீரப்பனின் பஃபூன், மனோ வீ கண்ணதாசனின் இறுதி பக்கம், ஜி.எஸ்.விக்னேஷ் இயக்கத்தில் நயன்தாரா நடித்த ஓ2 ஆகியப் படங்கள் இடம்பெற்றுள்ளன. இன்னும் வெளியாகாத பிகினிங், யுத்த காண்டம், மற்றும் ஆடு ஆகியவை அதிகாரப் பூர்வ தேர்வில் இடம்பெற்றுள்ளன.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT