செய்திகள்

கண்ணுக்குத் தெரியாத கார்ப்பரேட் யுத்தங்கள்

ஆதித்யா

ரு கார்ப்பரேட் நிறுவனத்தை  முதலீடு செய்து தொடங்கி நிர்வகித்து வருபவர்களுக்கே தெரியாமல் முன்னறிவிப்பும்  இல்லாமல் கைப்பற்றிவிட முடியுமா?  முடியும்...  உலகில் பல பெரிய நிறுவனங்களில் இது நடந்திருக்கிறது. நடந்துகொண்டிருக்கிறது.  இதை கார்ப்பரேட் மொழியில்   hostile take over  (விரோதமாக கையகப்படுத்துதல்) என்பார்கள். இதுதான் நடந்திருக்கிறது NDTV தொலைக்காட்சி நிறுவனத்தில்.

டெல்லியைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்படுகிறது என்டிடிவி எனும் செய்தி நிறுவனம். கடந்த 1984-ம் ஆண்டு, கொல்கத்தாவைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர் பிரனாய் ராய், அவரின் மனைவியும், பத்திரிகையாளருமான ராதிகா ராய் ஆகியோரால் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில், என்டிடிவி நிறுவனர்களான பிரனாய் ராய் , ராதிகா ராய் வசம் அந்த நிறுவனத்தின் 61.45 சதவிகிதப் பங்குகள் இருந்தன. குறிப்பாக, அவர்களின் ஆர்.ஆர்.பி.ஆர் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் (RRPR) நிறுவனத்திடம் 29 சதவிகிதப் பங்குகள் இருந்தன. இந்த நிறுவனத்தை நேரடியாக் வாங்க அதானி குழுமம் முயற்சி செய்துகொண்டிருந்தது. ஆனால் அதானியிடம் என்டிடிவி பங்குகளை விற்பனை செய்வதற்கு,என்டிடிவி தலைவர் பிரனாய் ராய் விரும்பவில்லை.  மோடி அரசுக்கு ஆதரவான செய்திகளை என்டிடிவி வெளியிடுவதில்லை என்ற குற்றசாட்டும் பரவலாகயிருந்தது.

இங்கே ஆரம்பிக்கிறது கார்ப்பரேட் யுத்தம். எப்படியும் என்டிடிவியை கைப்பற்றிவிட வேண்டும்  என அதானி வியூகங்கள் வகுக்க ஆரம்பித்தார். 

2000களின் இறுதிக்கட்டத்தில்  என்டிடிவி தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வந்தது. அந்த நிலையில், கடந்த 2009-ம் ஆண்டு `விஸ்வபிரதான் கமர்ஷியல் பிரைவேட் லிமிடெட்(VCPL) என்ற நிறுவனத்திடமிருந்து சுமார் 403.85 கோடி ரூபாயை ராய் தம்பதியின் RRPR நிறுவனம் கடனாகப் பெற்றது.  இதற்கு பிணையாக என்டிடிவியின் பங்குகளை அளித்திருந்தது. (இந்த நிறுவனம் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரியல் இன்வெஸ்மென்ட் நிறுவனத்திடம் மறைமுகத் தொடர்புடையதாகச் சொல்லப்படுகிறது)

 கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி `விஸ்வபிரதான் கமர்ஷியல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை, அதானியின் ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க்ஸ் (AMG Media Networks Limited) நிறுவனம் முழுவதுமாகக் கைப்பற்றிவிட்டது. 

அப்படி , அதானி வசமான VCPL நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் அவர்கள் கொடுத்த கடன்களும் அதன் பிணைகளும் அடக்கம்.  அதன்படி என்டிடிவி-யில் 29 சதவிகித பங்குகளை வைத்திருக்கும் RRPR நிறுவனத்தின் பங்குகளை தன்வசப்படுத்திக்கொண்டது. இதனால், என்டிடிவி ஊடகத்தின் மூன்றில் ஒரு பங்கு உரிமையை (29.18%) அதானி குழுமம் பெற்றிருக்கிறது. இதுதவிர என்டிடிவி-யின் 38.55 சதவிகிதப் பங்குகள் பொதுப் பங்குகளாக இருக்கின்றன. அதை அதானி குழுமம் ஓப்பன் ஆஃபர் (Open offer) மூலம் 26% பங்குகளை வாங்குவதற்கு முயன்றுவருகிறது. நவம்பர் 22-ம் தேதி தொடங்கிய ஓப்பன் ஆஃபர் பங்கு விற்பனை மூலம், 31.78 சதவிகிதப் பங்குகளை அதானி குழுமம் வாங்கியிருக்கிறது. இது இன்னும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

‘இந்த நிலையில்தான் என்டிடிவியின் நிறுவனர்களான  பிரனாய் ராய், ராதிகா ராய் இருவரும் ஆர்ஆர்பிஆர் குழுமத்திலிருந்து வெளியேறியிருக்கின்றனர். புதிய இயக்குநர்கள் ஆதானி குழுமத்தால் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். 

என்டிடிவியின் செய்தியில் அதன்  லோகோவுடன் வரும் வாசகம் “மாற்றத்துக்காகப் போராடு” “ Fight for change “  அது அவர்கள் நிறுவனக்கே  நடந்திருப்பதுதான் சோகம். 

உணர்ச்சிப் பொருளாதாரம் பற்றி தெரியுமா?

80 அடி உயர சிவபெருமான் சிலை எங்குள்ளது தெரியுமா?

ஆண்களை விட பெண்கள் ஏன் அதிகம் பேசுகிறார்கள் தெரியுமா?

ஒவ்வொன்றும் ஒரு ரகம்; தள்ளிப்போடுபவர்கள் மொத்தம் 5 ரகம்!

தமிழ் சினிமாவில் மாறாத விஷயங்கள் என எழுத்தாளர் சுஜாதா சொன்ன 20 சுவாரஸ்யமான விஷயங்கள்!

SCROLL FOR NEXT