ஜல்லிக்கட்டு  
செய்திகள்

மீண்டும் விசாரணைக்கு வரும் ஜல்லிக்கட்டு வழக்கு !

கல்கி டெஸ்க்

ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க கோரி பீட்டா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது.

ஜல்லிக்கட்டு போராட்டம் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆட்சியில் இருந்தபோது மெரினாவில் விஸ்வரூபம் எடுத்தது. ஜல்லிக்கட்டு வழக்கில் தமிழ்நாட்டிற்கு சாதகமான தீர்ப்பை பெறும் வகையில் சிறந்த வழக்கறிஞர்கள் மூலம் வலுவான வாதங்களை உச்சநீதிமன்றத்தில் வைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கின் முடிவு தமிழ்நாட்டிற்கு சாதகமாக அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே நிலவுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உச்சநீதிமன்றம்

ஜல்லிக்கட்டு, கம்பாளா உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும், இதுதொடர்பாக கொண்டுவரப்பட்ட சிறப்பு சட்டங்களை ரத்து செய்யக் கோரியும் பீட்டா மற்றும் விலங்குகள் நல அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தன. பீட்டா தரப்பில் காண்பிக்கப்பட்ட புகைப்படங்கள் எதார்த்தத்திற்கு முற்றிலும் முரணாக உள்ளது என்று தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது

இந்த மனுக்கள் நீதிபதிகள் கே.எம்.ஜோசப், அஜய் ரஸ்தோகி உள்ளிட்ட 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் கடந்த 24-ம் தேதி விசாரணைக்கு வந்தது.அப்போது, ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறி, பீட்டா சார்பில் சில புகைப்படங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன-

ஆனால்,.இதையடுத்து, பீட்டா அளித்த புகைப்படங்கள் ஒட்டுமொத்த விதிமுறைகளும் மீறப்படுகின்றன என்பதை நிரூபிப்பதற்கு போதுமானதாக இல்லை என்று தெரிவித்த நீதிபதிகள், புகைப்படங்களை பிரமாணப்பத்திரமாக உரிய முறையில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது.

நிக்ரஹம் செய்யத் தெரியாதவள்!

இரை தந்த இறைவனுக்கு இரையாலேயே அபிஷேகம்!

கடலை மாவை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க! 

ஐப்பசி அன்னாபிஷேகம் தோன்றிய வரலாறு!

உன்னால் முடியும் பெண்ணே! இந்த 5 அடிப்படை விஷயங்கள் இருந்தால் போதுமே!

SCROLL FOR NEXT