அமெரிக்காவில் விமானப்படை பயிற்சி அகாடமி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அதிபர் ஜோ பைடன் திடீரென கால் இடறி கீழே தவறி விழுந்தார். இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
எண்பது வயதான அதிபர் ஜோ பைடன் மேடையில் போடியத்தில் நின்று உரையாற்றி விட்டு தனது இருக்கைக்கு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக ஜோ பைடன் மேடையில் தவறி விழுந்தார்.
அங்கு விழா மேடையில் போடப்பட்டிருந்த மணல் மூட்டை ஒன்றை மிதித்தபோது கால் தடுமாறி அதிபர் ஜோ பைடன் கீழே விழுந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் அவருக்கு காயம் ஏற்படவில்லை, அவர் நலமாக உள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் 46-வது அதிபரானவரும் ஜனநாயக கட்சியை சேர்ந்தருமான ஜோ பைடனுக்கு தற்போது 80-வயது ஆகிறது. அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் மூத்த வயது அதிபர் என்ற பெருமையை பெற்றவர் ஜோ பைடன். உலக தலைவர்களுடனான சந்திப்பு, வெளிநாட்டு பயணம், உள்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு என ஜோ பைடன் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
அமெரிக்காவின் கொலரோடா மாகாணத்தில் விமானப்படை பயிற்சி முடித்தவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்றார். 81 வயதான அவர் விமானப்படை வீரர்களுக்கு சான்றிதழ் அளிக்க எழுந்த போது, மேடையில் கால் தவறி கீழே விழுந்தார்.
உடனடியாக அருகிலிருந்து விமானப் படை ஊழியர்கள் பைடனை தூக்கினர். பின்னர், அதிகாரிகளின் உதவி ஏதுமின்றி, அவர் நடந்து சென்று தமது இருக்கையில் அமர்ந்தார். இந்த சம்பவம் நிகழ்ச்சியின் நடுவே பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நிகழ்வை தொடர்ந்து, விழாவில் அதிபர் ஜோ பைடன் விமானப்படை பயிற்சி முடித்தவர்களுக்கு பட்டமளித்ததுடன், கைகுலுக்கி பாராட்டும் தெரிவித்தார்.