செய்திகள்

திருப்பதி பெருமாளை தரிசிக்க ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களுக்கான டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு!

கல்கி டெஸ்க்

திருப்பதி பெருமாளை தரிசிக்க ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களுக்கான ரூ. 300 தரிசன டிக்கெட்டுகளை திருப்பதி தேவஸ்தானம் இன்று இன்று காலை 10 மணிக்கு வெளியிட்டது.

"திருப்பதி போனால் திருப்பம்" என்பது பக்தர்களின் தாரக மந்திரம், அந்த திருப்பதி ஏழுமலையானை வருடம் ஒரு முறையாவது தரிசித்து விட வேண்டும் என்பதும் பக்தர்களின் ஏகோபித்த ஆசை. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோடை விடுமுறை என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளது.

இதனால் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இதில், 300 ரூபாய் தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் இரண்டு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். இலவச தரிசனத்திற்காக 10 முதல் 12 மணி நேரம் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருந்து ஏழுமலையானை வழிபட்டு செல்கின்றனர். இன்று காலை வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் உள்ள 29 அறைகளில் பக்தர்கள் காத்திருந்தனர்.

திருப்பதியில் ஏழுமலையானை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் வழிபட , பக்தர்கள் வசதிக்காக ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட் இன்று ஆன்லைனில் வெளியிடப்பட்டது என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. டிக்கெட்டுகள் தேவையான பக்தர்கள் தேவஸ்தானத்தின் WWW.tirupathibalaji.ap.gov.in இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம்டிக்கெட்டுகள் தேவையான பக்தர்கள் தேவஸ்தானத்தின் இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம்.

இந்நிலையில் நேற்று 85,297 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 37,392 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். கோவில் உண்டியலில் செலுத்திய காணிக்கை இரவு எண்ணப் பட்டது இதில் ரூ.3.71 கோடி காணிக்கையாக கிடைத்தது.

விமர்சனம்: கங்குவா - படக்குழுவின் பேட்டிகளும் இப்போது படமுமே 'மீம் மெட்டீரியல்'கள் ஆகிப் போச்சே!

காவிரியில் கடைமுழுக்காடி ஜன்மாவை கடைத்தேற்றுவோம்!

நிதானமாக இருப்பதால் கிடைக்கும் லாபம் என்ன தெரியுமா?

NISAR - இஸ்ரோ - நாசா கூட்டு முயற்சியில் பேரிடர் கண்காணிப்பு செயற்கைக்கோள்!

துணிந்தாருக்கு துக்கம் இல்லை!

SCROLL FOR NEXT