ஆதார் எண் மற்றும் பான் எண்ணை இணைக்க இன்றே கடைசி நாள்.. தவறினால் பான் கார்டு செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தற்போதைய நாட்களில் நாம் ஆதார், பான் எண்ணையை அதிகமான இடங்களில் பயன்படுத்துகிறோம். எங்கு வேலை செய்கிறோம் என்பதற்கு ஒரு ஐடி கார்டு இருப்பது போன்று நாம் யார் என்பதை தீர்மானிக்கும் வகையில் இந்த ஆதார், பான் கார்டுகள் உள்ளது. அத்தகைய ஆதார் பான் எண் இல்லாமல் நம்மால் எதுவும் செய்ய இயலாது. இரண்டும் தனி தனியாக இருப்பதற்கு பதிலாக இரண்டையும் இணைத்துவிட்டால் நல்லது என்ற முடிவில் மத்திய அரசு ஆதார் - பான் இணைப்பதை கட்டாயமாக்கினர்.
வரி ஏய்ப்பு, போலி ஆதார் மற்றும் பான் கார்டுகள் மற்றும் மோசடி ஆகியவற்றை தடுக்கும் வகையில், மத்திய அரசு ஆதாருடன் பான் கார்டு எண்ணை இணைக்க நடவடிக்கை மேற்கொண்டது. 2023 மார்ச் 31ஆம் தேதிக்குள்ளாக அனைவரும் ஆதாருடன் பான் கார்டு எண்ணை இணைக்க உத்தரவிடப்பட்ட நிலையில், ஜூன் 30ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இன்றுடன் இந்த அவகாசம் நிறைவு பெறுவதால், பொதுமக்கள் இன்றே இணைப்பது சிறந்ததாகும். ஏற்கனவே நீட்டிக்கப்பட்ட கால அவகாசமே அபராத தொகை கட்ட வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இன்று நீங்கள் ஆதார் - பான் இணைத்தாலும் ஆயிரம் ரூபாய் அபராத தொகை கட்ட வேண்டும். இன்றும் இணைக்காவிட்டால் நாளை முதல் பான், ஆதார் எண்ணை பயன்படுத்த முடியாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
எப்படி இணைக்க வேண்டும்:
முதலில் வருமான வரி துறையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கமான என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று link aadhaar என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு பான் கார்டு மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து continue to pay through e-pay tax என்பதை கிளிக் செய்ய வேண்டும். ஆன்லைன் மூலம் அபராதமாக ரூ. 1000 செலுத்த வேண்டும்.
அதன் பிறகு மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி எண்ணை பதிவிட்டு தேவையான ஆவணங்கள் அனைத்தையும் பதிவு செய்தால் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்து விடலாம்.