செய்திகள்

குரங்கம்மை ; பரவல் தடுக்க உயர்நிலைக் குழு அமைப்பு!

கல்கி

இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பை கட்டுப்படுத்தவும், தடுக்கும் நடவடிக்கையை மேற்கொள்வதற்காகவும் மத்திய அரசு சிறப்பு உயர்நிலை குழு ஒன்றை அமைத்துள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

–இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை மற்றும் மருத்துவத்துறை அமைச்சகம் தெரிவித்ததாவது:

உலகளவில் கொரோனா பரவலுக்கு அடுத்து குரங்கம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் முதன் முதலில் கேரளாவில் 2 பேருக்கு  குரங்கம்மை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.  இதனிடையே, ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் தலா ஒருவருக்கு குரங்கம்மை நோய் உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில்  இன்று டெல்லியில் 35 வயது நைஜீரியர் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் குரங்கம்மை பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்கான அடுத்த கட்ட முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

அந்த வகையில் குரங்கம்மை பரவை கட்டுப்படுத்தவும், அதனை தடுக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளவும் மத்திய அரசு சிறப்பு உயர்நிலை குழு ஒன்றை அமைத்துள்ளது. இதன் தலைவராக சுகாதார உறுப்பினர் வி.கே.பால் நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழு மத்திய அரசுக்கு வழங்கும் ஆலோசனைகளின் அடிப்படையில் செயல்படும். 

-இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது. 

இந்நிலையில் தமிழகத்தில் இந்நோய் பாதிப்பு யாருக்கும் இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து  அவர் தெரிவித்ததாவது;

தமிழகத்தில் இதுவரை இந்நோய் பாதிப்பு யாருக்கும் இல்லை. மேலும் மாநிலத்தின் அனைத்து  விமான நிலையங்களில் தீவிர காண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

-இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Male Heart Attack: ஆண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான 7 காரணங்கள்! 

சிரஞ்சீவியாக உலகில் வாழும் ஏழு பேர் யார் தெரியுமா?

சிறுகதை – தத்து!

75 ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த நியண்டர்தல் பெண்ணைப் பார்க்க வேண்டுமா? வாருங்கள்!

நீங்கள் வாழ்க்கையில் சரியான பாதையில் தான் செல்கிறீர்கள் என்பதற்கான 3 அறிகுறிகள்! 

SCROLL FOR NEXT