செய்திகள்

#BREAKING: அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் : ஐகோர்ட் அதிரடி!

கல்கி

கடந்த ஜூலை 11-ம் தேதியன்று இபிஎஸ் தலைமையில் நடத்தப்பட்ட  அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது.

ஓ பி எஸ் முன்னர் தொடர்ந்த வழக்கில், இப்பொதுக் குழுக் கூட்டம்  செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பளித்தார். இத்தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல் முறையீட்டு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் விசாரித்தனர்.

எடப்பாடி பழனிசாமி தரப்பில், தனி நீதிபதியின் தீர்ப்பில் பல்வேறு தவறுகள்

இருப்பதாக சுட்டிக்காட்டினர். கட்சியினர் ஒற்றை தலைமை வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாக கூறியதற்கு எந்த புள்ளி விவரங்களும் இல்லை எனவும், ஒன்றரை கோடி உறுப்பினர்களின் எண்ணத்தை 2500 பொதுக்குழு உறுப்பினர்கள் பிரதிபலித்தார்களா என தனி நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளது யூகத்தின் அடிப்படையிலானது எனவும் குறிப்பிட்டனர்.

தனது உரிமை பாதிக்கப்பட்டதால் தான் பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்திருக்கிறாரே தவிர, 1.50 கோடி உறுப்பினர்களின் உரிமைக்காக அல்ல எனவும் சுட்டிக்காட்டினர்.

பன்னீர்செல்வம் தரப்பில், அடிப்படை உறுப்பினர்களை விட பொதுக்குழு உறுப்பினர்களே மேலானவர்கள் என்ற எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வாதத்தை ஏற்க முடியாது என்றும், கட்சி விதிகளின் படி ஒருங்கிணைப் பாளர், இணை ஒருங்கிணைப் பாளர் மட்டுமே பொதுக்குழுவை கூட்ட முடியும் என்பதால் ஜூலை 11 கூட்டத்துக்கு அனுப்பிய நோட்டீஸ் செல்லாதது எனவும் வாதிட்டனர்.

 இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த 25-ம் தேதி . நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர்.

இந்நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:

கடந்த ஜூலை 11-ம் தேதி இ.பி.எஸ் தலைமையில் நடந்த அதிமுக பொதுக் குழுக் கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவு  ரத்து செய்யப் படுகிறது. அதன்படி ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லும்.

– இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

கோரைக்கிழங்கு பிரசாதமாக தரும் கோயில் எது தெரியுமா?

தேவ மருந்து தவசிக்கீரை!

Bread Kulfi Recipe: பிரட் இருந்தால் போதும், வீட்டிலேயே செய்யலாம் சுவையான குல்பி!

இந்திய நேர மண்டலத்தால் சாதகமா? பாதகமா?

அதிக புரதம் நிறைந்த 10 சைவ உணவுகள்!

SCROLL FOR NEXT