செய்திகள்

புதுமைப் பெண் திட்டம்; இன்று தொடக்கம்!

கல்கி

தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் படித்து தற்போது உயர் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

–இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது;

தமிழக அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு, உயர்கல்வி அல்லது பட்டயப்படிப்பு படித்து முடிக்கும் வரை மாதம் ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டத்துக்காக அரசு 698 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.புதுமைப்பெண் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த கல்வி உதவித் தொகையை பெற இதுவரை 4 லட்சம் மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

-இவ்வாறு தெரிவிக்கப் பட்டது.

இத்திட்டத்துக்கான தொடக்க விழா இன்று காலையில் சென்னையிலுள்ள பாரதி மகளிர் கல்லூரியில் நடைபெறுகிறது. முன்னதாக இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று சென்னை வந்தடைந்தார். மேலும் இந்த விழாவில் தமிழகத்தில் மாடல் பள்ளிகள் மற்றும் தகைசால் பள்ளிகளும் தொடங்கி வைக்கப்படுகின்றன.

“அற்ப மானிடனே, செத்துப் போ” -  பயனரை மோசமாகத் திட்டியதா Gemini AI?

என்னை துறந்து சென்றவனும் என்னால் துறக்கப்பட்டவனும்!

இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும் சமையல் எண்ணெய்கள்!

இந்த ரகசியம் மட்டும் தெரிஞ்சா இனி குளிர்ந்த நீரில்தான் குளிப்பீங்க! 

கார்த்திகை மாதத்தில் வீட்டு வாசலில் இரண்டு விளக்கு ஏற்றுவது ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT