சென்னையில் இன்று முதல் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால்.500 அபாரம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
–இதுகுறித்து சென்னை மாநகராட்சி அறிவித்ததாவது:
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் தினசரி பாதிப்பு 2500-க்கும் அதிகமாக கடந்து பதிவாகி வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அந்த வகையில், சென்னையில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. அந்த வகையில் பொது இடங்களில் குறிப்பாக வணிகவளாகம், திரையரங்குகள், மார்க்கெட் போன்ற மக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் இன்று முதல் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.
மேலும் வணிக நிறுவன ஊழியர்கள், மற்றும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்திருப்பதை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். அங்காடிகளில் சமூக இடைவெளியை பின்பற்றி பொதுமக்களை அனுமதிக்க வேண்டும்.
-இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.