செய்திகள்

வங்க கடலில் புதிதாக உருவாகியுள்ள புயல் சின்னம்! 

கல்கி

வங்கக்கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுப் பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி புயல் சின்னமாக உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

–இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது; 

நாட்டில் ஒடிசா – மேற்கு வங்க கடலோரப் பகுதியை ஒட்டிய வட மேற்கு வங்க கடல் பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தற்பொழுது வலுப் பெற்று ஆழ்ந்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது.

இதனையடுத்து இந்த கடலோரப் பகுதிகளில் புதிய புயல் சின்னம் உருவாகி வடமேற்கு அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக் கடல் –தெற்கு ஓடிசா அதனை ஒட்டிய ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது.

இது மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு பகுதியில் நகர்ந்து சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா பகுதி அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் வாய்ப்புள்ளது. 

–இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாக ஒடிசா பகுதியில் அடுத்த மூன்று நாட்களுக்கு அதீத கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும், மேலும் சத்தீஸ்கர் கோவா மற்றும் கொங்கன் பகுதிகள், மேற்கு மத்திய பிரதேஷ், கிழக்கு மத்திய பிரதேஷ் மற்றும் குஜராத் பகுதிகளில் அடுத்த ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து கனமழை முதல் அதீத கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

80 அடி உயர சிவபெருமான் சிலை எங்குள்ளது தெரியுமா?

ஆண்களை விட பெண்கள் ஏன் அதிகம் பேசுகிறார்கள் தெரியுமா?

ஒவ்வொன்றும் ஒரு ரகம்; தள்ளிப்போடுபவர்கள் மொத்தம் 5 ரகம்!

தமிழ் சினிமாவில் மாறாத விஷயங்கள் என எழுத்தாளர் சுஜாதா சொன்ன 20 சுவாரஸ்யமான விஷயங்கள்!

Male Heart Attack: ஆண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான 7 காரணங்கள்! 

SCROLL FOR NEXT