இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் உடல் நலக்குறைவு காரணமாக, நேற்று இரவு 11 மணியளவில் காலமானார் என்று பக்கிங்காம் அரண்மனை வட்டாரம் அறிவித்தது.
-இதுகுறித்து பக்கின்காம் அரண்மனை வெளியிட்ட தகவலில் குறிப்பிட்டதாவது:
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் அவர்களுக்கு உடல் நலக்குறைவு காரணமாக, ஸ்காட்லாந்து நகரில் பால் மோரல் கோட்டையில் ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில் வயது மூப்பு காரணமாக, உடல் நலக் கோளாறு ஏற்பட்டு, அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது.
மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.இதையடுத்து ராணியின் மகனும் பிரிட்டன் இளவரசருமான சார்லஸ் அவருடைய மனைவி கமிலா உள்ளிட்ட ராணியின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் பால் மோரல் கோட்டைக்கு வருகை தந்தனர். இந்த நிலையில், நேற்று இரவு இந்திய நேரப்படி 11.05 மணி அளவில் அவர் காலமானார்.
-இவ்வாறு பக்கிங்காம் அரண்மனை வட்டாரம் தகவல்கள் தெரிவித்தது.
இந்த நிலையில், பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்துள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது;
பிரிட்டன் ராணி நம் காலத்தில் வாழ்ந்த மிகப்பெரிய மரியாதைக்கும், நம்பிக்கைக்குரியவர்.தன்னுடைய நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும், தலைசிறந்த ராணியாக பொறுப்பேற்றிருந்தார்.
பொது வாழ்க்கையில் கண்ணியத்தையும், நாகரிகத்தையும், கடைபிடித்து வந்தார். அவருடைய மறைவு மிகுந்த வேதனை தருகிறது. அவருடைய குடும்பத்தாருக்கும், இங்கிலாந்து நாட்டு மக்களுக்கும், ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
-இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.