செய்திகள்

காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் பதவி: குலாம் நபி ஆசாத் ராஜினாமா!

கல்கி

ஜம்முகாஷ்மீர் காங்கிரஸ் பிரசாரக் குழு தலைவராக நியமிக்கப்பட்ட குலாம் நபி ஆசாத் தனது பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று அறிவித்தார். 

ஜம்முகாஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு அந்த மாநிலத்தை ஜம்முகாஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இந்நிலையில், அங்கு சட்டப் பேரவை தேர்தலை நடத்த வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், ஜம்முகாஷ்மீரில் காங்கிரஸ் பிரச்சாரக் குழு தலைவராக குலாம் நபி ஆசாத் நியமிக்கப்பட்டார். ஆனால், இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்திலேயே அந்த பதவியை ராஜினாமா செய்வதாக குலாம் நபி ஆசாத் அறிவித்தார் 

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு ஆசாத் எழுதிய கடிதத்தில் கூறியதாவது; 

என் உடல்நிலை சரியில்லாத காரணத்தால்  இந்தப் பதவியை ஏற்க முடியவில்லை.. எனக்கு பொறுப்பு வழங்கியதற்காக நன்றி. 

இவ்வாறு காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு ஆசாத் கடிதம் எழுதியிருக்கிறார் 

ஜம்முகாஷ்மீர் காங்கிரஸ் கட்சியில் நிலவி வரும் உட்கட்சிப் பூசலுக்கு முடிவு கட்டும் விதமாகவே ஆசாத்துக்கு அந்தப் பொறுப்பை சோனியா வழங்கியதாக கூறப்படும் நிலையில் அவரின் இந்த திடீர் முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் ஜி-23 தலைவர்களில் ஆசாத்தும் ஒருவர் என்பது குறிப்பிடத் தக்கது. 

“அற்ப மானிடனே, செத்துப் போ” -  பயனரை மோசமாகத் திட்டியதா Gemini AI?

என்னை துறந்து சென்றவனும் என்னால் துறக்கப்பட்டவனும்!

இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும் சமையல் எண்ணெய்கள்!

இந்த ரகசியம் மட்டும் தெரிஞ்சா இனி குளிர்ந்த நீரில்தான் குளிப்பீங்க! 

கார்த்திகை மாதத்தில் வீட்டு வாசலில் இரண்டு விளக்கு ஏற்றுவது ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT