செய்திகள்

சீனாவில் கடும் வெப்பம்; பல மாகாணங்களில் ரெட் அலர்ட்! 

கல்கி

சீனாவில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடௌம் வெப்பம் அதிகரித்து வருவதால், பல மாகாணங்களில் நான்கு அடுக்கு எச்சரிக்கையான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. 

இதுகுறித்து சீன அரசு அதிகாரபூர்வமாக தெரிவித்ததாவது; 

சீனாவில் கன்சு, ஷான்சி, ஹெனான், அன்ஹுய் பகுதிகளில் வெப்ப அளவு 40 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும் என்று சீன வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து வெப்பநிலையை எதிர்கொள்ள உள்ளூர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மக்களை தேவையில்லாமல் வெளியில் வரவேண்டாம் என்றும் தீ விபத்துகள் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக இருந்துகொள்ளவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது கடந்த வெள்ளிக்கிழமை சீனாவின் பல மாகாணங்களில் 35 டிகிரி செல்சியஸ் தாண்டி வெயில் கொளுத்தியது. இந்த நிலையில் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் தற்போது சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது. 

சீனாவில் வெப்பத்தின் காரணத்தினால் காட்டு தீ ஏற்படாமல் இருக்கவும் கண்காணிக்கப்படுகிறது.தேவைப்பட்டால் செயற்கையான மழையையும் கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் கொளுத்தும் வெப்பநிலைக்கு மத்தியில் சீனா முதல் தேசிய வறட்சி அவசரநிலையை அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

ரொம்ப tired-ஆ இருக்கு...ஒரு நாள் லீவு கிடைக்குமா?

புதூர் மலைக் கிராமத்திலிருந்து புளிச்சாறு ஏற்றுமதி!

அமேசானின் புதிய Fire TV Stick 4K இந்தியாவில் அறிமுகம்!

ஆடுகளுக்கு கோடை காலத் தீவனமாகும் சீமைக் கருவேலக் காய்கள்!

முதுகுத் தண்டுவட பிரச்னைகளைத் தீர்க்கும் பிரண்டை!

SCROLL FOR NEXT