செய்திகள்

கல்விக் கடன் தள்ளுபடி: அமெரிக்காவில் அசத்தல் அறிவிப்பு!

கல்கி

அமெரிக்காவில் கல்லூரி மாணவர்களின் கல்விக் கடனில் தலா 10 ஆயிரம் டாலர் (ரூ.15 லட்சம் } தள்ளுபடி செய்வதாக அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். இதையடுத்து அந்நாட்டில் அவருக்கு பாராட்டுகள் பெருகியுள்ளன.

-இதுகுறித்து அமெரிக்க அரசு தெரிவித்ததாவது;

அமெரிக்காவில் மாணவர்களின் கடன் சுமார் ஒன்றரை டிரில்லியன் டாலராக இருக்கிறது. இந்த கடன் சுமை இன்னமும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அங்குள்ள நடுத்தர மக்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. எனவே கடன் பெற்ற மாணக்கர்களுக்கு 50 ஆயிரம் டாலர் வரை தள்ளுபடி வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்து கல்லூரி மாணவர்களின் கல்விக் கடனில் தலா  10 ஆயிரம் டாலர் தள்ளுபடி செய்வதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

-இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதையடுத்து அமெரிக்காவில் மாணவர்கள் மற்றும் பெற்றோரின் ஆதரவு  அதிபர் ஜோ பைடனுக்கு அதிரிகரித்துள்ளது.

இரை தந்த இறைவனுக்கு இரையாலேயே அபிஷேகம்!

கடலை மாவை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க! 

ஐப்பசி அன்னாபிஷேகம் தோன்றிய வரலாறு!

உன்னால் முடியும் பெண்ணே! இந்த 5 அடிப்படை விஷயங்கள் இருந்தால் போதுமே!

Dear Girls… உங்கள் தொப்பையை மறைக்க இப்படி ட்ரெஸ் பண்ணுங்களேன்!

SCROLL FOR NEXT