செய்திகள்

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! 

கல்கி

பிலிப்பைன்ஸில் இன்று அதிகாலையில் நாட்டின் வடக்கு பகுதியில் 7.1 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை

-இதுகுறித்து அந்நாட்டு தேசிய நிலநடுக்கவியல் ஆய்வுமையம் மற்றும் அமெரிக்க புவியியல் ஆய்வகம் தெரிவித்ததாவது;

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு பகுதியில் லுசோன் தீவில் மலைகள் சூழ்ந்த அப்ரா மாகாணம் உள்ளது. இங்குள்ள டோலோரஸ் பகுதியில் இன்று காலையில் ரிக்டர் அளவில் 7.1 அளவில் மிகவும் சக்திவாயந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அலறியடித்து வீடுகளை விட்டு வெளியே வந்தனர். எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

-இவ்வாறு பிலிப்பைன்ஸ் மற்றும்  என்று அமெரிக்க புவியியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது. இதே போல, ஆப்கானிஸ்தானின் பைசாபாத் பகுதியிலும் இன்று அதிகாலையில் ரிக்டர் ஸ்கேலில் 5.4 என்ற அளவில் பதிவாகியது. இந்த நில அதிர்வு பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

புடவைக் கட்டும் பொழுது பெண்கள் செய்யக்கூடாத 9 தவறுகள்!

நிமிர்ந்த நடைக்கு ஆதாரமான முதுகெலும்பை பராமரிக்க 10 எளிய வழிகள்!

புதுமைக்கொரு எடுத்துக்காட்டு; துணிச்சலுக்கு ஓர் அடையாளம் - HBD பார்த்திபன் Sir!

நிக்ரஹம் செய்யத் தெரியாதவள்!

இரை தந்த இறைவனுக்கு இரையாலேயே அபிஷேகம்!

SCROLL FOR NEXT