செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கன மழை எச்சரிக்கை!

கல்கி

தமிழகத்தில் செப்டம்பர் வரும் 2-ம் தேதி வரை கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

-இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு மற்றும் கடலோர ஆந்திர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளின் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

முக்கியமாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி போன்ற மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளின் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தென் தமிழ்நாடு மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், திருச்சி, சேலம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

செப்டம்பர் 2-ம் தேதி அன்று தமிழ்நாடு,புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலையாக 34 முதல் 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். கடல் பகுதிகளில் பலத்த காற்று வீச கூடம் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

-இவ்வாறு சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நிக்ரஹம் செய்யத் தெரியாதவள்!

இரை தந்த இறைவனுக்கு இரையாலேயே அபிஷேகம்!

கடலை மாவை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க! 

ஐப்பசி அன்னாபிஷேகம் தோன்றிய வரலாறு!

உன்னால் முடியும் பெண்ணே! இந்த 5 அடிப்படை விஷயங்கள் இருந்தால் போதுமே!

SCROLL FOR NEXT